"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்று, அதில் 2வதாக வெற்றியும் பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 'கன்னித்தீவு', 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா', 'அலேகா', 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

பட வாய்ப்பிற்காக நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். ஆனால் படவாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் போதும். ஐஸ்வர்யா தத்தா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். 

எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் முன்னழகு - பின்னழகு என ரசிகர்களை கவரும் விதத்தில்  புகைப்படங்களை வெளியிடுவதில் அம்மணி கில்லாடி.

பிக்பாஸ் நிகழ்ச்சி, இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும், சிலர் ஆதரவும் கொடுத்தனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் இவர் சர்வாதிகாரியாக வலம் வந்த நாட்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டியது முதல், பலரை சிறை கைதிகளாக மாற்றி, போட்டியாளர்களை ஒரு வழி செய்து விட்டார். 

பிக்பாஸ் வீட்டில், தன்னுடைய தோழி எகிற ஒரே காரணத்திற்காக கடைசி வரை இவருக்கு துணை நின்றவர் என்றால் அது யாஷிகா ஆனந்த் தான். வெளியே வந்த பின்பும் சில நாள் ஒன்றாக சுற்றி திரிந்த இவர்கள் தற்போது மீண்டும் அவரவர் வேலையை பார்க்க துவங்கி விட்டனர். 

இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா தோழி யாஷிகாவை ஓவர்  டேக் செய்யும் அளவிற்கு அழகிய மெல்லிய புடவையில், ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

அந்த புகைப்படங்கள் இதோ...