மலையாளத்தில் மெகா ஸ்டார் மம்முட்டியுடன் “பிரஜாபதி” என்ற படத்தின் மூலம் முதல் முறையாக திரையுலகில் அதிதி ராவ் அடியெடுத்து வைத்தார். தமிழில் அதிதி ராவ் நடித்த “சிருங்காரம்” என்ற திரைப்படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை குவித்தது. இதையடுத்து இந்திக்குச் சென்ற அதிதி ராவ் அங்கும் அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க பாலிவுட் நாயகியாகவே செட்டிலாகிவிட்டார். 

 

இதையும் படிங்க: “வனிதாவை பச்சை பச்சையாக கிழிக்க காரணம் இதுதான்”... போலீசை கண்டும் அஞ்சாத சூர்யா தேவியின் அடுத்த வீடியோ...!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக “காற்று வெளியிடை” படத்தில் தோன்றினார். அந்த படத்தில் அதிதி ராவின் கொள்ளை கொள்ளும் அழகு ரசிகர்களின் மனதை வென்றது. இதனால் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். இதையடுத்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்திலேயே “செக்கச் சிவந்த வானம்” படத்தில் நடித்தார். கொஞ்சம் நேரமே வரும் கதாபாத்திரம் என்றாலும் அதிதி ராவின் பளீச் முகம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. 

 

இதையும் படிங்க:  நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

லாக்டவுனுக்கு முன்னதாக இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்த “சைக்கோ” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் “துக்ளக் தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இருதினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. அதேபோல் மலையாளத்தில் அதிதிராவ் நடித்த “சுஃபியும் சுஜாதாயும்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

இந்நிலையில் சோசியல் மீடியாவில் எப்போதும் படு ஆக்டிவாக இருந்து வரும் அதிதி ராவ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. யாரென்றே தெரியாத நபர் ஒருவர் அதிதி ராவின் இரண்டு கால்களையும் பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் அந்த வீடியோ பீதியை கிளப்புகிறது. இன்ஸ்டாகிராமில் புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள ரீல் என்ற வசதி மூலம் அதிதி ராவ் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். 

இதையும் படிங்க: “நான் ஏதாவது பண்ணிக்கிட்டால்”.... நெட்டிசன்களுக்கு வனிதா விடுத்த அதிரடி எச்சரிக்கை...!.

பிங்க் நிற டாப், பிளாக் கலர் பேண்ட் அணிந்துள்ள அதிதி ராவின் இரண்டு கால்களையும் பிடித்து யாரோ தரையில் வேகமாக இழுத்துச் செல்ல, அவரோ சிரித்த படி இருக்கும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.