பிரதமர் மோடிக்கு நன்றி கூறும் ராணுவ வீரராக நடித்த பாலிவுட் நடிகர்கள்
பரம் வீர் சக்ரா விருது பெற்ற இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை அந்தமான் தீவுகளுக்குச் சூட்டியதற்கு ராணுவ வீரர் பாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் பகுதியாக உள்ள தீவுகளில் இதுவரை பெயரிடப்படாமல் உள்ள 21 பெரிய தீவுகள் உள்ளன. ராணுவ வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் அந்தத் தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவு செய்த்து. இதன்படி, இன்று நடைபெற்ற அரசு விழாவில் 21 தீவுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி 21 ராணுவ வீர்கள் பெயரைச் சூட்டினார்.
இந்நிலையில் பாலிவுட் திரைப்படங்களில் பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்களின் பாத்திரத்தில் நடித்த நடிகர்கள் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, சுனில் ஷெட்டி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டரில் பதிவில் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது வீர சாவர்க்கர் மண்!: அந்தமானில் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டி பிரதமர் மோடி உரை
அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பதிவில், “பரம் வீர் சக்ரா கேப்டன் மனோஜ் குமார் பாண்டே பெயரை ஒரு தீவுக்குச் சூட்டுவது முன்னுதாரணமானது. தாய்நாட்டிற்கான அவர் செய்த உயர்ந்த தியாகம் வருங்கால தலைமுறையினருக்கும் ஊக்கமளிக்கும். பிரதமருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் மரணத்தின் பின்னணி என்ன?
“அந்தமான் நிக்கோபாரில் உள்ள ஒரு தீவுக்கு நமது ஹீரோ கேப்டன் விக்ரம் பத்ராவின் பெயர் சூட்டப்பட்டது என்ற செய்தி என்னை நெகிழ வைக்கிறது! திரைப்படத்தில் அவருடைய பாத்திரத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை எண்ணி என் மனம் பெருமிதம் கொள்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கை ஷெர்ஷா என்றென்றும் வாழ்வதை உறுதி செய்கிறது.” என்று சித்தார்த் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
“நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126வது பிறந்தநாளில் அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருதாளர்களின் பெயரைச் சூட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி. அவர்கள்தான் நம் நாட்டின் உண்மையான நாயகர்கள். மிகப் பெருமிதமான தருணம். ஜெயஹிந்த்.” என்று சுனில் ஷெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.