இது வீர சாவர்க்கர் மண்!: அந்தமானில் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டி பிரதமர் மோடி உரை

அந்தமான் நிகோபாரின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ராணுவ வீரர்கள் பெயரைச் சூட்டினார்.

Prime Minister Narendra Modi names the 21 largest unnamed islands of Andaman & Nicobar Islands, via video conferencing.

அந்தமான் நிகோபாரின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ராணுவ வீரர்கள் பெயரைச் சூட்டினார்.

அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் பகுதியாக உள்ள தீவுகளில் இதுவரை பெயரிடப்படாமல் உள்ள 21 பெரிய தீவுகள் உள்ளன. ராணுவ வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் அந்தத் தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவு செய்த்து. இதன்படி, இன்று நடைபெற்ற அரசு விழாவில் 21 தீவுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி 21 ராணுவ வீர்கள் பெயரைச் சூட்டினார்.

காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர்,  21 ராணுவ வீரர்களுக்கு பரம் வீர் சக்ரா விருதுகளையும் வழங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவாக அவர் பெயரிலான தீவில் அமைக்கப்பட இருக்கும் நினைவகத்தின் மாதிரி வடிவத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, “முதன்முதலாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட பூமி இந்த அந்தமான் நிலம். சுதந்திர இந்திய அரசாங்கம் முதல்முறையாக உருவாக்கப்பட்டது இங்குதான். இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள். இந்த நாளை பராக்கிரம் திவாஸ் என்று நாடு கொண்டாடுகிறது.” என்றார்.

“வீர சாவர்க்கரும், நாட்டுக்காகப் போராட்டிய இன்னும் பல வீரர்களும் இந்த அந்தமான் மண்ணில் சிறை வைக்கப்பட்டனர். 4-5 ஆண்டுகளுக்கு முன்பு நான் போர்ட் பிளேயருக்குச் சென்றபோது, அங்குள்ள மூன்று தீவுகளுக்கு பெயர் சூட்டினேன்” என்று தனது முந்தைய பயணத்தை நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று 21 தீவுகள் புதிய பெயர் பெற்றுள்ளன. இந்த 21 தீவுகளின் பெயர்கள் பல செய்திகளைச் சொல்கின்றன. இந்தியா ஒரே பாரதம், ஒன்றிணைந்த பாரதம் என்பதைக் குறிக்கின்றன. நமது ஆயுதப்படைகளின் வீரத்தைக் எடுத்துக்காட்டுவதாக உள்ளன” என்று தெரிவித்தார்.

பரம் வீர் சக்ரா விருது பெற இருப்பவர்கள் விவரம்:

மேஜர் சோம்நாத் சர்மா, சுபேதார் ஹானி கேப்டன் கரம் சிங், 2வது லெப்டினன்ட் ராம ரகோபா ரானே, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், கேப்டன் ஜிஎஸ் சலாரியா, லெப்டினன்ட் கர்னல் தன்சிங் தாபா, சுபேதார் ஜோகிந்தர் சிங், மேஜர் ஷைத்தான் சிங், அப்துல் ஹமீத், லெப்டினன்ட் கர்னல் அர்தேஷிர் புர்சோர்ஜி தாராபூர், லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா, மேஜர் ஹோஷியார் சிங், 2வது லெப்டினன்ட் அருண் கேத்ரபால், பறக்கும் படை அதிகாரி நிர்மல்ஜித் சிங் செகோன், மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், நைப் சுபேதார் பனா சிங், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், மற்றும் ஓய்வுபெற்ற சுபேதார் மேஜர் (ஹானி கேப்டன்) கிரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ்

அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட பெயரிடப்படாத 21 தீவுகள் இன்று முதல் இந்த 21 ராணுவ வீரர்கள் பெயரால் அழைக்கப்படும்.

2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சென்றபோது அங்குள்ள ரோஸ் ஐலேண்ட் என்ற தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்டப்பட்டது. நீல் தீவு, ஹேவ்லாக் தீவு ஆகியவையும் ஷாஹீத் தீவு, சுயராஜ்ஜியத் தீவு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios