Netaji Subhash Chandra Bose Death Mistry: நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் மரணத்தின் பின்னணி என்ன?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்து 80 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் இறப்பில் இன்னும் பலருக்கும் புரியாத மர்மம் நீடித்து வருகிறது. விமானவிபத்தில்தான் நேஜாதி இறந்தாரா அல்லது அந்த விபத்துக்குப்பின்பும் உயிருடன் இருந்தாரா என்ற கேள்வி அவர்களுக்குள் தொடர்ந்து எழுந்துள்ளது.

Why does Netaji Subhas Chandra Bose's death continue to be a mystery?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்து 80 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் இறப்பில் இன்னும் பலருக்கும் புரியாத மர்மம் நீடித்து வருகிறது. விமானவிபத்தில்தான் நேஜாதி இறந்தாரா அல்லது அந்த விபத்துக்குப்பின்பும் உயிருடன் இருந்தாரா என்ற கேள்வி அவர்களுக்குள் தொடர்ந்து எழுந்துள்ளது.

நேதாஜியின் மர்ம மரணம் குறித்து இதுவரை பல்வேறு நூல்கள், விவாதங்கள், ஆலோசனைகள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டாலும் யாராலும் நேதாஜியின் இறப்புக்கான காரணம் குறித்து உறுதியாகத் தெரிவிக்க முடியவில்லை. அவர் இறப்பு குறித்த உறுதியான அறிக்கையும் இல்லை.

பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பதில்

கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி, தைவானில் உள்ள தஹிஹோகு விமானநிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட நேதாஜியை அதன்பின் யாரும் பார்க்கவில்லை என்பதே நிதர்சனம். அவர் விமான விபத்தில் உயிரிழந்தார் என்று ஜப்பான் அரசு தெரிவித்து அவரின் அஸ்தியைக் கூட உலகிற்கு காண்பித்துவிட்டது. ஆனாலும் நேதாஜியின் குடும்பத்தினர், உறவினர்கள் நேதாஜி உயிரிழப்பை நம்பவில்லை.

ஜப்பான் அரசு அறிக்கை

ஜப்பான் அரசு நேதாஜி மரணம் குறித்து விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டது. “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணத்துக்கான காரணங்கள் மற்றும் இதர விஷயங்கள் குறித்தவிசாரணை”என்ற தலைப்பில் அறிக்கையை  வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, 1945ம்ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளது. 

இந்த அறிக்கை 1956ம் ஆண்டு நிறைவு செய்து டோக்கியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அளி்த்தது. ஆனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசு அறிக்கையை வெளப்படையாக மக்களுக்கு அறிவிக்கவில்லை.

LIC Recruitment 2023: எல்.ஐ.சி.யில் 9394 பேருக்கு வேலை! விண்ணப்பிப்பது எப்படி?

அந்தஅறிக்கையின்படி “ விமானம் டேக்ஆப் ஆகி வானில் பிறந்த சில நிமிடங்களில் விமானத்தில் இறக்கை உடைந்ததால் விமானத்தின் எந்திரம் செயல் இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் நேதாஜி உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, தீக்காயத்துடன் தப்பித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிலமணிநேரத்துக்குப்பின் அவர் உயிரிழந்தார்எனத் தெரிவித்துள்ளது

ஆனால், கடந்த 1946ம் ஆண்டு கர்னல் ஜான் ஜி பிக்னஸ் எனும் பிரிட்டன் உளவுத்துறை அதிகாரி நேதாஜி குறித்த தனதுவிசாரணை அறிக்கையை வெளியிட்டார். அதில் “1945ம்ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி விமான விபத்துக்குப்பின், நேதாஜி தஹிஹோ ராணுவ மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டு, அன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் உயிரழந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அ ரசு என்ன சொல்கிறது

நேஜாதி மரணம் குறித்து விசாரிக்க கடந்த 1956ல் ஷா நவாஸ் குழு, 1970ம் ஆண்டில் கோஸ்லா ஆணையம், 2005ம் ஆண்டு முகர்ஜி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை.

ஆனால், கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஜப்பான் அரசு நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசிடம்வழங்கிய விசாரணை அறிக்கையை வெளியி்ட்டது. அதில் தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்துவிட்டார் என்று அறிவித்தது. அவரின் அஸ்தி, அவர் சார்ந்த பொருட்கள் டோக்கியாவில் உள்ள ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது

முதியவரை காரில் 8 கி.மீ. தரதரவென இழுத்துச் சென்று கொன்ற கொடூரம்

ஆனால் நேதாஜியின் ஆதரவாளர்கள், அனுதாபிகள், குடும்பத்தினர் என பலரும் நேதாஜி விமான விபத்தில் தப்பி உயிருடன், மறைந்து வாழ்ந்தார் என்று நம்புகிறார்கள். கடந்த 2006ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசும், நேதாஜி உயிரிழப்பு குறித்த ஜப்பான் அரசின் அறிக்கையை ஏற்றுக்கொண்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios