'ராவணன்' பட காட்சியை வெளியிட்டு... இயக்குனர் மணிரத்னத்துக்கு பல்லாயிரம் நன்றிகள் சொன்ன நடிகர் விக்ரம்..!

'ராவணன்'  படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்ற நடிகர் விக்ரம், மிகவும் உணர்வு பூர்வமாக... இந்த படத்தின் இயக்குனர் மணிரத்னத்துக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.   இவரது ட்விட்டர் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

actor vikram thanking for director manirathanam latest tweet goes viral

தமிழில் வெளியாகும் சிறந்த படங்களுக்கு, ஒவ்வொரு வருடமும், தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கி கௌரவிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்கள், சின்னத்திரை நெடுந்தொடர், மாணவர்கள் இயக்கிய குறும்படம் ஆகிவற்றில் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என, பலருக்கு விருதுகள்  நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

இந்த விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிலையில், இதில்...  2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, விருதுகள் அறிவிக்கப்பட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர். இவ் விழாவில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சாமிநாதன் ஆகியோர் விருதுகளை வழங்கி, பிரபலங்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

actor vikram thanking for director manirathanam latest tweet goes viral

மேலும் செய்திகள்: வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு டாட்டா ! புதிய சேனலில்... காம்பேக் கொடுக்க தயாரான ஆல்யா மானசா! வெளியான தகவல்!

இதில் சிறந்த நடிகருக்கான விருதுகள் அடிப்படியில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ராவணன்' படத்தில் வீரா என்கிற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்ததற்காக அவருக்கு தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை நேற்று வேஷ்டி சட்டையில் வந்து, பெற்று கொண்டார் விக்ரம். இவரை தொடர்ந்து 'ராஜா ராணி' படத்திற்காக ஆர்யாவிற்கும், காவிய தலைவன் படத்திற்காக சித்தார்த்துக்கும், மலையன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் கரணுக்கும்,  அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததற்காக நடிகர் பிரசன்னா ஆகியோருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கபட்டது.

actor vikram thanking for director manirathanam latest tweet goes viral

இந்த விருதுக்கு தற்போது தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் போட்டுள்ள பதிவில், "வீராவுக்கு கிடைத்த இந்த பாராட்டுக்கும், மரியாதைக்கும் பல்லாயிரம் நன்றிகள். என் இயக்குனர் Mani Ratnam sirஅவர்களுக்கும்" என தெரிவித்துள்ளார். இதனுடன் ராவணன் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். விக்ரமின் இந்த பதிவை அவரது ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: பட்டு சேலை கட்டிய அழகு சிலையாய்.. முகம் காட்டாமல்.. பின்னழகை வளையவளைய காட்டிய ரம்யா பாண்டியன்.. போட்டோஸ்!
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios