தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் இல்லாததால் விஜய் சேதுபதி வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொழுதை கழித்து வருகிறார். கூடவே நேரலை உரையாடல், அடுத்த பட கதைகளை முடிவு செய்வது, கதை விவாதம் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் ஆன்லைன் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதியின் பளீச் பதில்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளது. 

 

இதையும் படிங்க: அஜித்துக்கு வந்த நெருக்கடி...“வலிமை” பட தயாரிப்பாளருக்கு தலயிடம் இருந்து பறந்த இ-மெயில்....!

லாக்டவுனுக்கு முன்பு வரை நடிகர் விஜய் சேதுபதி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருந்தார். சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். அதனால் கடுப்பான சிலரோ தஞ்சை பெரிய கோவில் விவகாரத்தில் ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்ததாகவும், பணம் வாங்கி கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பல பொய்யான வதந்திகளை பரப்பி வந்தனர். 

 

இதையும் படிங்க: “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

இடையில் கடவுள் பற்றி சர்ச்சை கருத்து கூறியதாகவும் விஜய் சேதுபதி மீது புகார்கள் குவிந்தன. அதன் பின்னர் கொரோனா லாக்டவுனால் நிறைய பேர் பசி, பட்டினியால் வடுவதை கண்ட விஜய் சேதுபதி, பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என ட்வீட் செய்தார். அதனையும் சிலர் ட்ரோல் செய்து கிண்டனர். அதன் பிறகு தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம், புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை என எதற்கும் விஜய் சேதுபதி ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாக தெரியவில்லை. 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இதையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஜய் சேதுபதி, ஏதேனும் ஒரு கருத்து சொன்னால் அதற்கு எதிர்ப்பு, ஆதரவு வருவது சகஜம். கருத்து சொல்லி பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. அதேபோல் யாரையும் புண்படுத்தும் எண்ணமும் கிடையாது. ஏனென்றால் என் வேலை அதுவல்ல. யாருடைய வெறுப்பையும் சம்பாதித்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எனக்குச் சில விஷயங்கள் சரி என்று தோன்றுகிறது, சொல்கிறேன். நடிகன் என்பதால் எல்லா விஷயத்திலும் கருத்து சொல்ல வேண்டும் என்பது இல்லை. கருத்து சொல்லிவிட்டு ஓரமாய் நிற்க முடியாது. அதேபோல் கருத்து மட்டும் சொல்லிவிட்டு தள்ளி நிற்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என பதிலளித்துள்ளார்.