தளபதி விஜய், சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு நடிக்க இருந்த படத்தின் சம்பளத்தை தற்போது குறைத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"பிகில்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "கைதி" புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கடந்த மாதமே வெளியாக இருந்த இந்த படம், தற்போது கொரோனா  பிரச்சனை காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.இந்த படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருவதால், இப்போது விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. 

'மாஸ்டர்' திரைப்படத்தில்  விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து  நடித்துள்ளது. இந்த படம் ஓடிடி  தளத்தில்  வெளியாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவதால், எப்போது திரையரங்கம் திறக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

மேலும் செய்திகள்: தனுஷ் தந்தைக்கு முக்கிய பதவி... திரைப்பிரபலங்களுக்கு கொக்கி போடும் பாஜக... அடுத்தடுத்து 3 பேருக்கு ஜாக்பாட்!
 

மேலும் அவ்வப்போது அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள  65வது படத்தின் பற்றிய புதிய புதிய தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது தீவிரமடையும் கொரோனா பிரச்சனைகள் காரணமாக சம்பளத்தில் ஒரு தொகையை குறைத்து கொள்ள வேண்டுமென ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்யிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்தது. 

மேலும் செய்திகள்: குழந்தைகளுக்கு அறிவு பசியோடு... வயிற்று பசி போக்கிய வள்ளல்... காமராசரின் 118 பிறந்தநாள்! சிறப்பு தொகுப்பு!
 

இதையடுத்து முதலில் மறுத்தாலும் பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்ததாக கூறப்பட்டது. ஆனால் விஜய் மட்டும் விடாப்பிடியாக இந்த படத்திற்கு சம்பளமாக பேசப்பட்டுள்ள 100 கோடி சம்பளத்தை குறைத்து கொள்ள முடியாது என ஒரேயடியாக அடம்பிடித்து வந்துள்ளார்.

 இதனால் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படம் தயாரிக்கும் முயற்சியையே கைவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில், ஏற்கனவே சன் பிச்சர் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்த 'சர்க்கார்' திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சொத்தை காரணத்தை காட்டி ஒரு வழியாக 20 கோடி சம்பளத்தை குறைத்துள்ளதாம் படக்குழு. 

மேலும் செய்திகள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்!
 

மேலும் கொரோனா பிரச்சனையால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு, இன்னும் சம்பளத்தை விஜய் குறைத்து கொள்ளவேண்டும் என, படக்குழு வலியுறுத்தி வந்தாலும் விஜய் தரப்பில் இருந்து கறாராக மறுக்கப்பட்டு வருகிறதாம்.