தளபதி விஜய், அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளது, 'துப்பாக்கி 2 ' என்கிற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தையே சூடாக்கி உள்ளது. எனவே விஜய் ரசிகர்கள் #thuppakki2 என்கிற ஹேஷ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'துப்பாக்கி'. இந்த படத்தில் ஆர்மி அதிகாரியாக நடித்திருந்தார் விஜய். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

மேலும், மலையாள நடிகர் ஜெயராம், சத்யன், விதியுத் ஜமால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்திருந்தனர்.

மேலும் செய்திகள்: மொக்கை ட்விட்டுக்கு இருக்கும் ரெஸ்பான்ஸ் நல்ல ட்விட்டுக்கு இல்லை! ஆதங்கத்தில் வீடியோ போட்ட ஸ்ரீபிரியா!
 

காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட், சஸ்பென்ஸ் என அணைத்து அம்சங்களோடும் உருவாகி,  பார்க்கும் ஒவ்வொருவரையும் ரசிக்க வைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, எப்போது விஜய், 'துப்பாக்கி 2 ' படத்தில் நடிப்பார் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்காத விஜய் ரசிகர்களே இல்லை எனலாம்.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய், 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி விட்டது. ஆனால்  எப்படி பட்ட படத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் இன்னும் வெளியாகவில்லை.  

மேலும் செய்திகள்: ஏழை ரசிகரின் வீட்டில் டீ குடித்த அஜித்! தயங்கி நின்றவருக்கு இன்ப அதிர்ச்சி! புகைப்படத்தோடு வெளியிட்ட பிரபலம்!
 

இந்த நிலையில் ’துப்பாக்கி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ’துப்பாக்கி’ படத்தின் ஸ்டில்களை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் விஜய் ரசிகர்களுக்கு சூசகமாக அடுத்ததாக விஜய், 'துப்பாக்கி 2 ' படத்தில் நடிக்க உள்ளார் என அவர் கூறிவிட்டதாக, கருதி அதகள படுத்திவருகிறார்கள். ஆனால் இது வெறும் யூகிப்பு மட்டுமே. துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை தவிர சந்தோஷ் சிவன் வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: சூர்யா - ஜோதிகாவின் குலதெய்வ வழிபாடு..! பட்டு பாவாடையில் மகள்... வேஷ்டி சட்டையில் மகன்! வைரலாகும் வீடியோ!
 

ஒருவேளை இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால்... விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Santosh Sivan ISC ASC (@sivan_santosh) on May 2, 2020 at 6:47am PDT