நாளுக்கு நாள், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், இதில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க அவர்களுக்கு, சாணிடைசர் போன்ற பொருட்களை அரசாங்கம் இலவசமாக வழங்க வேண்டும் என நடிகை ஸ்ரீபிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது... இந்த நேரத்தில் கொரோனா தொற்றை நம்பை விட்டு தள்ளி வைப்பதற்காக, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை நாம் கடையில் கேட்டால் அவர்களிடம் இருந்து வரும் பதில் நோ ஸ்டாக். 

அதனால் நாம் அவர்களையும் ஒன்றும் சொல்ல முடியாது. இதற்கு அரசாங்கம், இது போன்ற பொருட்களை தயாரிப்பவர்களிடம், டை அப் வைத்து கொண்டு, குறைந்த விலைக்கு அரசுக்கு கொடுக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் காசு கொடுத்து வாங்கலாம். வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் தினமும், வீட்டில் உள்ளவர்களுக்கு காச்சல் இருக்கிறதா, சளி பிரச்சனை இருக்கிறதா என மாநகராட்சி மூலம் கேட்பது பாராட்டுக்குரிய விஷயம். அவர்களே இதையும் கேட்டு குறைந்த பட்சம் 10 நாளுக்கு ஒரு முறையாவது இது போன்ற பொருட்களை தர வேண்டும் என ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.

இந்த கருத்தை வலியுறுத்தி நான் ஒரு ட்விட் போட்டதற்கு எந்த ஒரு வரவேற்பும் இல்லை. ஆனால் மொக்க ட்விட் போட்டால் பயங்கரமாக சப்போர்ட் கொடுப்பீர்கள். 

 அதே போல், கொஞ்சம் நாளுக்கு முன்பு கிராமப்புற பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வேண்டும் என நான் போட்ட ட்விட்டுக் உடனடியாக பீலா, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார் அவருக்கு என்னுடைய நன்றிகள். நாம் கேட்டதால் கொடுக்கப்படும் என்கிற சூழ்நிலையில் இருக்கிறோம். வசதி படைத்தவர்களால் வாங்க முடியும், அதே நேரத்தில் வசதி இல்லாதவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது நமது கடமை என, ஸ்ரீபிரியா தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார். 

இவரின் இந்த கருத்துக்கு பலரும் தங்களுடைய வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள்.