அடிக்கடி இங்க தான் போய் வந்தாராம் வடிவேலு..! இப்போ அதுவும் முடியல..?

மீம்ஸ் நாயகனாக மட்டுமே தற்போது கண்டு ரசிக்கப்பட்டு கொண்டிருக்கும், வைகைப் புயல் வடிவேலு கடந்த சில வருடங்களுக்கு முன், ஓய்வில்லாமல் நடித்து வந்த பிரபலம் இவரை பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று, பிரபல நாளிதழில் வெளியாகியுள்ளது.
 

actor vadivelu regularly visit him kuladaivam temple

மீம்ஸ் நாயகனாக மட்டுமே தற்போது கண்டு ரசிக்கப்பட்டு கொண்டிருக்கும், வைகைப் புயல் வடிவேலு கடந்த சில வருடங்களுக்கு முன், ஓய்வில்லாமல் நடித்து வந்த பிரபலம் இவரை பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று, பிரபல நாளிதழில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: 5 ஜி சேவைக்கு எதிராக வழக்கு... ரூ. 20 லட்சம் அபராதம் கட்டும் நடிகை! ஏன் தெரியுமா?
 

1990ம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. இன்று வரை வடிவேல் ஏதாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டாரா? எனும் ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’,‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.

actor vadivelu regularly visit him kuladaivam temple

மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசித்து வந்த வைகைப் புயல் வடிவேலு சமீபத்தில், சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறார். இதிலே இவர் தான் நடிக்க ஒத்துழைப்பு தர  மறுக்கிறார் என்றது, 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படக்குழு. இவரை பற்றிய சர்ச்சைகள் நீண்டு கொண்டே இருக்க,  சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டு பேசி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் வடிவேலு.

மேலும் செய்திகள்: மறைந்த சங்கீதா மேகம்... எஸ்.பி.பி-யின் 75 ஆவது பிறந்தநாள் இன்று..!
 

actor vadivelu regularly visit him kuladaivam temple

'கர்ணன்' படத்தில் இருக்கும் 'சேராத இடம் சேர்த்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா' என கனத்த குரலில் பாடி, சோகத்தை வெளிப்படுத்தியதோடு கண் கலங்கி அழுதார். மேலும் நீங்கள் எல்லாம் ஒரு வருடம் தானே லாக் டவுனில் இருக்கிறீர்கள் நான் 10 வருடமாக லாக் டவுனில் இருக்கிறேன் வீட்டிலேயே முடங்கி கிடப்பது எவ்வளவு ரணம் தெரியுமா என உருக்கமாக பேசினார். இவர் இப்படி பேசியதை தொடர்த்து இவருக்கு ஆதரவு குரல்கள் கூடியது, அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் செய்திகள்: 44 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறாரா விக்ரம் பட நடிகை? தீயாய் பரவும் தகவல்..!
 

actor vadivelu regularly visit him kuladaivam temple

ஆனால் மீண்டும் கொரோனா இரண்டாவது அலை துவங்கி விட்டதால், மீண்டும் அனைத்து படப்பிடிப்புகளும் முடங்கியுள்ளது. படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருந்த காலங்களில் அவ்வப்போது தன்னுடைய சொந்த ஊரான மதுரைக்கு சென்றுகொண்டிருந்த வடிவேலு, பட வாய்ப்புகள் இல்லாமல் போனதில் இருந்து அதிகமாக மதுரையில் தான் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: 'வலிமை' படத்தில் அஜித் கெட்அப் குறித்து லீக் செய்த 'மாஸ்டர்' பட நடிகை..! அப்போ வேற லெவல் கொண்டாட்டம் தான்!
 

actor vadivelu regularly visit him kuladaivam temple

மேலும் தனக்கு தோன்றும் போதெல்லாம்... மதுரை அருகே கிராமம் ஒன்றில் இருக்கிற தன்னுடைய குலசாமி கோவிலுக்கு தான் செல்வதை வடிவேலு வழக்கமாக வைத்திருந்ததாக பிரபல நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மீண்டும் கொரோனா அலை மக்களை வாட்டி வதக்கி வருவதால், அனைத்து வழிபாட்டு தளங்களும் தற்போது மூடப்பட்டுள்ளது எனவே, வடிவேலு அடிக்கடி சென்று வந்த   வந்த குலசாமி கோவிலுக்கும் அவர் இப்போது செல்வதில்லை என கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios