5 ஜி சேவைக்கு எதிராக வழக்கு... ரூ. 20 லட்சம் அபராதம் கட்டும் நடிகை! ஏன் தெரியுமா?

நவீன தொழில் நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், விரைவில் இந்தியாவிலும் 5 ஜி சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதற்க்கு எதிராக  பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம், மனுவை தள்ளுபடி செய்ததுடன் நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
 
Case filed against 5G service Delhi High Court fines actress Rs 20 lakh why?

மேலும் செய்திகள்: மறைந்த சங்கீதா மேகம்... எஸ்.பி.பி-யின் 75 ஆவது பிறந்தநாள் இன்று..!
 
5 ஜி சேவை இந்தியாவில் துவங்கப்பட்டால், அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனிதர்கள் மட்டுமின்றி பெரும்பாலான பறவைகள், விலங்குகள் உள்பட பிற உயிர்களுக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எனவே இந்த 5ஜி சேவையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் நடிகை ஜூகி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தார்.

Case filed against 5G service Delhi High Court fines actress Rs 20 lakh why?

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தொகுப்பாளராகவும் பல்வேறு திறமைகளோடு அறியப்படும் இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’  படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிப்பு என்பதை தாண்டி, பல்வேறு சமூக பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.

மேலும் செய்திகள்: மறைந்த சங்கீதா மேகம்... எஸ்.பி.பி-யின் 75 ஆவது பிறந்தநாள் இன்று..!
 
Case filed against 5G service Delhi High Court fines actress Rs 20 lakh why?

இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பம் காரணமாக இவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,  4ஜி சேவையால் ஏற்படுத்தும் பாதிப்பை விட, 5 ஜி சேவை...   10 முதல் 100 மடங்கு வரை அதிக கதிர் வீச்சை ஏற்படுத்த கூடியது.  இதனால் மனிதர்கள் மட்டுமின்றி பாதிப்பு ஏற்படுவது இன்றி, பல்வேறு வகையான பறவைகள், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே 5 ஜி சேவையை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என,  நடிகை ஜூகி  சாவ்லா பொதுநல வழக்கு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 

மேலும் செய்திகள்: 'வலிமை' படத்தில் அஜித் கெட்அப் குறித்து லீக் செய்த 'மாஸ்டர்' பட நடிகை..! அப்போ வேற லெவல் கொண்டாட்டம் தான்!
 
Case filed against 5G service Delhi High Court fines actress Rs 20 lakh why?

இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி, நடிகை ஜூகி சாவ்லா தன்னை விளம்பபார படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற நோக்கில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்ததோடு, நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios