44 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறாரா விக்ரம் பட நடிகை? தீயாய் பரவும் தகவல்..!
தமிழி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

தமிழில் நடிகர் சத்யராஜிக்கு ஜோடியாக 'அழகேசன்' என்கிற படத்தில் நடித்துள்ளவர் பிரேமா. இதை தொடர்ந்து விக்கரமுக்கு ஜோடியாக 'கண்களின் வார்த்தை' படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் 'தாயே புவனேஸ்வரி' என்கிற பக்தி படத்திலும் பிரேமா நடித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த இவர், தமிழ் மற்றும் மற்ற மொழிகளை விட கன்னட படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். அதே போல் தெலுங்கிலும், சுமார் 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜீவன் அப்பாச்சு என்பவரை பெற்றோ சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இனிமையாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீர் என வந்த கருத்து வேறுபாடு இவர்களை விவாகரத்து வரை அழைத்து சென்றது.
பின்னர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிறந்த நடிகை பிரேமா தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், மாப்பிள்ளையை கூட தேர்வு செய்து விட்டதாக ஒரு தகவல் கன்னட திரையுலகில் தீயாக சுற்றி வருகிறது.
இதுபோன்ற ஒரு தகவல் வெளியாக பிரேமாவிற்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எனினும் இது குறித்து நடிகை பிரேமா தரப்பில் இருந்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.