Thala Ajith Viral Video : அண்மையில் தனக்கு நடந்த ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நடிகர் அஜித் கால்பந்தாட்ட மைதானத்தில் தனது மனைவியுடன் காணப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் தல அஜித். தற்பொழுது பிரபல இயக்குனர் மகள் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்கின்ற திரைப்படத்தில் அவர் இப்போது நடித்து வருகிறார். அஸிர்பைஜான் என்கின்ற நாட்டில் அந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகள் கழித்து பிரபல நடிகை த்ரிஷா இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் தல அஜித் அவர்களுடைய மூளையில் ஒரு சிறு கட்டி இருப்பதாகவும், அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகவும் சில வதந்திகள் பரவியது. ஆனால் அவர் வழக்கமான உடல்நிலை பரிசோதனை மேற்கோள் சென்றார் என்று பின்னர் தெரியவந்தது.
கமல்ஹாசனை தொடர்ந்து.. நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூ.1 கோடியை அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்!
அந்த பரிசோதனையில் அவர் கழுத்து நிரம்பல் வீக்கங்கள் இருப்பதாகவும், அதற்காக ஒரு சிறிய சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதைப்போலவே மருத்துவமனைக்கு சென்ற வெகு சில மணி நேரங்களில் சிகிச்சை முடிந்து தல அஜித் அவர்கள் நலமுடன் வீடு திரும்பியது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை கொடுத்தது.
இந்த சூழ்நிலையில் நடிகர் அஜித் அவர்கள் தனது மனைவி ஷாலினி மற்றும் நண்பர்களோடு இணைந்து கால்பந்தாட்ட மைதானம் ஒன்றில் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைகளாக பகிரப்பட்டு வருகிறது.
