இந்த குற்றச்சாட்டால் பாலிவுட் பிரபலங்களின் வாரிசு நடிகர், நடிகைகள் மீது ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 6 மாதமாகவே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் தனது தந்தை, சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கூட பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. 34 வயதே ஆன சுஷாந்தின் அதிர்ச்சி மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: அட நம்ம யாஷிகாவா இது?.... ஸ்லிம் லுக்கில் ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு கொடுத்த அடக்க ஒடுக்கமான போஸ்கள்!

லாக்டவுன் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சுஷாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அவர் மன அழுத்தத்தில் இருப்பது பல பாலிவுட் பிரபலங்களுக்கு தெரிந்தும் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனிடையே சுஷாந்தின் தாய் மாமா அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இதனிடையே பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பல பகீர் தகவல்கள் வெளியான. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளின் வாரிசுகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக எழுந்துவருகிறது. இதனால் சுஷாந்த் 6 மாதமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

இந்த குற்றச்சாட்டால் பாலிவுட் பிரபலங்களின் வாரிசு நடிகர், நடிகைகள் மீது ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். அவர்களை கண்டபடி விமர்சிக்கும் ட்ரால் போஸ்ட்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் பிரேதபரிசோதனை அறிக்கை மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கில் தொங்கிய நிலையில், மூச்சுத் திணறி தான் உயிரிழந்துள்ளார். வேறு எந்த வெளிப்புற அழுத்தமோ, போராட்டோமோ அவர் மரணத்தின் போது நிகழ்ந்ததற்கான அறிகுறி இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளதும், சுஷாந்த் வீட்டில் இருந்து 5 டைரிகள் கைப்பற்றப்பட்டதும் பாலிவுட் பிரபலங்கள் பலரையும் பதற்றத்தில் வைத்துள்ளதாம்.