MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • NEET Protest: களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல..!

NEET Protest: களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல..!

அரசியலில் குதிக்கிறாரா நடிகை ஜோதிகா.! நீட்டுக்கு எதிராக அவர் கூறிய கருத்து என்ன? அதுக்கும் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுவதற்கும் என சம்பந்தம் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 25 2026, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமடையும் போராட்டம்.!
Image Credit : our own

நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமடையும் போராட்டம்.!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் (NEET) தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குறைகளை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தின் மையக் கோரிக்கைகளாகத் தேர்வு முறையின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் மாணவர்களின் நியாயமான எதிர்காலம் ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வில் தொடர்ந்து எழும் சந்தேகங்கள், கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதோடு அவர்களின் நம்பிக்கையையும் குலைக்கிறது. இதனால், தேர்வு தொடர்பான போராட்டமானது, இந்தியக் கல்வி முறையே எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விவாதமாக மாறியுள்ளது. இந்த போராட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாணவர்களுக்காகக் களத்தில் குதித்த ஜோதிகா.!
Image Credit : X

மாணவர்களுக்காகக் களத்தில் குதித்த ஜோதிகா.!

இச்சூழலில், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்குப் பிரபல நடிகை ஜோதிகா தனது வெளிப்படையான ஆதரவை அறிவித்துக் களமிறங்கியுள்ளார். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:

“மாணவர்களுடனும், நம் தேசத்தின் எதிர்காலத்துடனும் நான் உறுதியாகத் துணை நிற்கிறேன்.” என்று கூறியுள்ளார். ஜோதிகாவின் இந்த நிலைப்பாடு, போராட்ட களத்தில் உள்ள மாணவர்களின் மனநிலைக்குப் புதிய பலத்தையும், விவாதத்திற்குப் புதிய வெளிச்சத்தையும் சேர்த்துள்ளது.

மேலும், தற்போதைய கல்வி முறையில் ஆழமான மற்றும் புரட்சிகரமான சீர்திருத்தங்கள் உடனடித் தேவையாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீட் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் ஜோதிகா அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Related image1
NEET போராட்ட மேடையில் பரபரப்பு... சனம் ஷெட்டியை பேச விடாமல் மைக்கை பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - காரணம் என்ன?
Related image2
NEET Re-Exam: நீட் வினாத்தாள்.. அதிரடியாக களத்தில் இறக்கப்பட்ட இந்திய விமானப்படை
35
மக்களுடன் "குஷி ஜோடிகள்": கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!
Image Credit : our own

மக்களுடன் "குஷி ஜோடிகள்": கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

ஜோதிகா மாணவர்களுக்காகக் தைரியமாக ஆதரவுக் குரல் கொடுத்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. திரை உலகில் இருந்து கிடைத்த இந்த முக்கிய ஆதரவை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் வரவேற்று வருகின்றனர்.

குறிப்பாக, சமீபத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராகவும், கல்வி முறையில் மாற்றங்கள் வர வேண்டும் என்றும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் தலைவர் விஜயின் ரசிகர்களிடையே இது மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் ஆல்-டைம் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘குஷி’ படத்தில் விஜய் - ஜோதிகா ஜோடியின் வேதியியல் (Chemistry) மிகவும் பிரபலம். தற்போது, நிஜ வாழ்க்கையிலும் மக்கள் பிரச்சினைக்காகவும், மாணவர்களின் கல்வி உரிமைக்காகவும் இருவருமே ஒரே நேர்கோட்டில் நின்று குரல் கொடுப்பது ரசிகர்களைச் சிலிர்க்க வைத்துள்ளது.

45
நிஜ வாழ்வின் மக்கள் குரல்.!
Image Credit : ANI

நிஜ வாழ்வின் மக்கள் குரல்.!

தளபதி விஜய் ஒருபுறம் அரசியல் களத்தில் நீட் தேர்வுக்கு எதிராகத் மாணவர்களின் கல்வி உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். மறுபுறம், நடிகை ஜோதிகா கல்வி முறையைச் சீரமைக்கக் கோரியும், மத்திய அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் மாணவர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுத்துள்ளார்.

இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், "அன்று திரையில் 'குஷி ஜோடிகள்' என மக்களை மகிழ்வித்தவர்கள், இன்று நிஜ வாழ்வில் மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் 'குஷி ஜோடிகளாக' ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்கள்... செம்ம இல்ல..!" என்று சமூக வலைத்தளங்களில் மீம்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

55
பொறுப்பை உணர்ந்து செயல்படும் பிரபலங்கள்.!
Image Credit : our own

பொறுப்பை உணர்ந்து செயல்படும் பிரபலங்கள்.!

திரைத்துறையில் இருக்கும் முன்னணி பிரபலங்கள், தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து இதுபோன்று மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக நேரடி நிலைப்பாடு எடுப்பது, நீட் எதிர்ப்பு போராட்டத்திற்குப் புதிய பரிமாணத்தையும், மாணவர்களின் நியாயமான குரலுக்கு உலகளாவிய கவனத்தையும் பெற்றுத் தந்துள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
நீட் தேர்வு
மத்திய அரசு
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வைகோ பின்பற்றுங்கள்..! தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்! என்ன நடக்குது நாட்டுல...?
Recommended image2
உண்ணாவிரத்தை வாங்சுக் வாபஸ் பெற்றாலும்; சூடு குறையாத CJP போராட்டக்களம்!
Recommended image3
NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!
Related Stories
Recommended image1
NEET போராட்ட மேடையில் பரபரப்பு... சனம் ஷெட்டியை பேச விடாமல் மைக்கை பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - காரணம் என்ன?
Recommended image2
NEET Re-Exam: நீட் வினாத்தாள்.. அதிரடியாக களத்தில் இறக்கப்பட்ட இந்திய விமானப்படை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved