சூர்யாவின் 42வது திரைப்படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, கோவா, கேரளா மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், மதன் கார்க்கியின் வசனங்களில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்து வெளியிட இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சூர்யா 5 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தின் நாயகியாக திஷா பட்டாணி நடிக்க, இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மூத்த நடிகை கோவை சரளா, மூத்த நடிகர் ஆனந்தராஜ், பிரபல மூத்த இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : 'மாமன்னன்' ஹிட்தான் ஆனால் டல்லடிக்கும் வசூல்!

கடந்த ஏப்ரல் 2019ம் ஆண்டு இந்த திரைப்படம் குறித்த தகவல் வெளியானது, சூர்யாவின் 39வது திரைப்படமாக இது வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "அண்ணாத்த" திரைப்பட பணிகளில் பிஸியாக இருந்த காரணத்தினால், இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் தள்ளிப்போனது. 

தற்பொழுது சூர்யாவின் 42வது திரைப்படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, கோவா, கேரளா மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் துவங்கி நடந்து வருகிறது. சுமார் 350 கோடி ரூபாய்க்கு மேல் Kanguva படத்தின் பட்ஜெட் உள்ளது என்றும், நடிகர் சூர்யாவின் திரைப்பட வரலாற்றில் மாபெரும் பட்ஜெட் கொண்ட படம் இதுவென்றும் கூறப்படுகிறது.

2024ம் ஆண்டு முற்பாதியில், ஒரே நேரத்தில் 2D மற்றும் 3D வடிவில் Kanguva திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கொடைக்கானலில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் தற்போது ஷூட்டிங் நடந்து வருகின்றது. Flashback காட்சிகளில் வரும் பழங்குடி மக்கள் குறித்த காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதையும் படியுங்கள் : லால் சலாம் படப்பிடிப்புக்கு நடுவே சுவாமி தரிசனம்!