'மாமன்னன்' ஹிட்தான் ஆனால் டல்லடிக்கும் வசூல்! இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
உதயநிதி நடிப்பில் பக்ரீத் பண்டிகையை குறிவைத்து, ரிலீஸ் ஆன 'மாமன்னன்' திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இந்த வாரம் வெளியான, 'மாமன்னன்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், வசூல் டல்லடித்துள்ளது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், உதயநிதியை கதாநாயகனாக வைத்து இயக்கி, ஹர்டிக் வெற்றியை திரையுலகில் பதிவு செய்துள்ளார். இதுவரை நடித்திராத, கதாபாத்திரத்தில், அனைவரும் சமம் என்கிற கொள்கைக்கு போராடும் துடிப்பான இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், உதயநிதி.
பில்லா, சாமி உள்ளிட்ட 5 சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க முடியாது என கூறிய அசின்! ஏன் தெரியுமா?
உதயநிதிக்கு தந்தையாக வடிவேலுவும், வில்லனாக ஃபகத் பாசிலும், நாயகியாக கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படம் வெளியாகும் முன்னரே... அதாவது அமைச்சர் பதவியை ஏற்றதுமே இது தான் தன்னுடைய கடைசி படம் என உதயநிதி கூறியதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் இப்படம் நேற்று முன்தினம், வெளியானது. முதல் நாளில் உலகம் முழுவதும் 10 கோடி வரை வசூலித்த இப்படம், இரண்டாவது நாளில் 7 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
விமர்சன ரீதியாக, நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், முதல் நாளை விட... இரண்டாம் நாள் வசூல் டல் அடித்துள்ளது. எனினும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.