சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வந்த திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது.

 

 

லாக்டவுன் நேரத்தை பயன்படுத்திக் கொண்ட சிம்புவும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். அதுவும்  ‘மாநாடு’ படத்திற்காக கடின உடல் பயிற்சிகள் செய்து,  கிட்ட தட்ட 100 கிலோவிலிருந்து  அவர் தற்போது 21  கிலோ உடல் எடையை குறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு படம் என கணக்கு போட்டு நடிக்காவிட்டாலும் சிம்பு மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பாசமே தனிதான்.  சிம்புவின் பிட்னஸ் தோற்றத்தை பார்க்க வேண்டுமென அவருடைய ரசிகர்கள் போஸ்டர் எல்லாம் ஒட்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: பீட்டர் பாலை பிரிந்துவிட்டேனா?... உண்மையை உருக்கமாக வெளிப்படுத்திய வனிதா...!

நவம்பர் முதல் வாரத்தில் மாநாடு பட ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஒரே மாதத்தில் ஷூட்டிங்கை முடிக்க போவதாக சுசீந்திரன்  கூட்டணியில் கிராமத்து கதையில் நடித்து வருகிறார். சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்தபோது விமான நிலையத்தில் அவரை பார்த்தவர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருந்தார். ஆனால் அப்போது மாஸ்க்கால் முகத்தை மூடியிருந்ததால் அவரது முகத்தை பார்க்க முடியவில்லை. படப்பிடிப்பு தளத்திலும் யாரும் போன் பயன்படுத்தக் கூடாது என சுசீந்திரன் ஆர்டர் போட்டுள்ளதால், சிம்பு ரசிகர்களின் கனவு நிறைவேறாமலேயே உள்ளது. 

 

இதையும் படிங்க: குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்... அடித்து துரத்தி விட்ட வனிதா... நடந்தது இதுவா?

இந்நிலையில் வரும் 22ம் தேதி சூப்பரான அறிவிப்பு ஒன்றை சிம்பு வெளியிடப்போகிறாராம். அதாவது அன்றைய தேதியில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் சிம்பு இணையப் போகிறாராம். மேலும் தனக்கென தனி யூ-டியூப் சேனலையும் சிம்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக தென்னிந்திய நடிகைகளிலேயே ஹன்சிகா மோத்வானி தனக்கென தனியாக ஒரு யூ-டியூப் சேனல் ஆரம்பித்து, அதன் மூலம் ரசிகர்களுக்கு தன்னைப் பற்றிய தகவல்களை தெரியப்படுத்தி வருகிறார். தற்போது அதே வழியில் சிம்புவும் யூ-டியூப் சேனல் ஆரம்பிக்க உள்ளதால் ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.