பீட்டர் பாலை பிரிந்துவிட்டேனா?... உண்மையை உருக்கமாக வெளிப்படுத்திய வனிதா...!
தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான சில பதிவுகளை பதிவிட்டு மனவேதனையை வெளிக்காட்டியுள்ளார்.
பிக்பாஸ் பிரபலமான வனிதா 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது. காரணம் பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் குழந்தைகளை தவிக்கவிட்டு வந்துவிட்டார் என்ற முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கூறிய குற்றச்சாட்டு.
பீட்டர் பால் மிகப்பெரிய குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் எலிசபெத் அப்போத குற்றச்சாட்டினார். ஆனால் அதை காதில் வாங்காத வனிதா, பீட்டர் பால் ஒரு ‘டீடோட்டலர்’ எங்கள் கல்யாணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என சப்போர்ட் செய்தார்.
சமீபத்தில் கோவாவில் வனிதாவின் 40வது பிறந்தநாளை கொண்டாட குடும்பம் மொத்தமும் சென்றிருந்தது. அப்போது பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு வந்த வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொறுமையாக இருந்த வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி பீட்டர் பாலை அடி வெளுத்துவிட்டாராம்.
தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான சில பதிவுகளை பதிவிட்டு மனவேதனையை வெளிக்காட்டியுள்ளார்.
காதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது. ஆனால் நான் அதை எல்லாம் கடந்து தைரியமாக இருப்பேன். காதலில் நம்பிக்கை வைத்து ஏமாறுவது மிகவும் வேதனையானது, தாங்க முடியாத வலியை தருகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் உங்களுக்கு அது பெரிதாக தெரியாது.
உங்கள் கண் முன்பு வாழ்க்கை பறிபோவது தான் மிகவும் வேதனையானது. அதை நான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது நடந்திருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியாது. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
போலி செய்திகளை படித்துவிட்டு ஏதாவது பேச வேண்டாம். நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் என்னை திட்டுவது சரி அல்ல. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு அதை நான் கொடுத்தேன். என் கனவுகள், வாழ்க்கையின் நம்பிக்கை எல்லாம் நொறுங்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் பாசிட்டிவாக இருந்தாலும், பயமாக இருக்கிறது.
வாழ்க்கையில் பல விஷயங்களை பார்த்த தைரியமான பெண் நான். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து எதையும் யூகிக்காதீர்கள், ஏனென்றால் அது காயப்படுத்துகிறது. அன்பு ஒன்று தான் என்னை பாதிக்க முடியும். எனக்கு அதிசயங்கள் மீது நம்பிக்கை உள்ளது. அப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இந்த நேரத்தில் நான் யாருக்கும் இதற்கு மேல் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. இது என் வாழ்க்கை. நான் தான் எதிர்கொள்ள வேண்டும். பீட்டர் பால் மீது குறை சொல்லி நான் அதன் மூலம் நல்லவர் போன்று தெரிய, அனுதாபம் பெற விரும்பவில்லை. நான் எதிர்பார்க்காத ஒன்று நடந்துவிட்டது. என் குழந்தைகளின் நலனை மனதில் வைத்து நல்ல முடிவை எடுப்பேன். அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்கிறேன். அப்படி நடக்காவிட்டால் நான் எதிர்கொள்வேன். என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.