பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிற பழமொழி உண்டு. ஆனால் சமீபத்தில் குஜராத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபூருக்கு தனது 2 குழந்தையுடன் செல்ல இருந்த பெண் ஒருவர், கையில் கிடைத்த கொஞ்ச நஞ்ச உணவையும், குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு பசியால் உயிர் விட்ட கோர சம்பவம் உலகையே உலுக்கியது.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சன்னி லியோன் போன்ற பிரபலங்களின் பாஸ்போட் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா?
 

முசாபூர் ரயில் நிலையத்தை அடையும் முன்னரே உயிர் விட்ட தன்னுடைய தாய், இறந்தது கூட தெரியாமல், அவர் உடல் மேல் போத்தப்பட்டிருந்த போர்வையை இழுத்து, அவரது 2 வயது குழந்தை எழுப்ப முயன்ற வீடியோ வைரலாகியது.

தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய பச்சிளம் குழந்தை செய்த செயல் பார்ப்பவர்கள் கண்களையே குளமாக்கியது.  

மேலும் செய்திகள்: முன்னாள் காதலர் பிரபுதேவாவுடன் நயன்தாரா...? வாய்திறப்பாரா விக்னேஷ் சிவன்!
 

இந்நிலையில் தன்னுடைய தாயை இழந்து, நிற்கும் குழந்தைகளை பிரபல பாலிவுட்  நடிகர் ஷாருக்கான் தன்னுடைய 'மீர்' பவுண்டேஷன் மூலமாக தத்து எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை ஷாருக்கான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, தாயை இழந்த வலியை தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும். அந்த வலி எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும், என கூறியுள்ளார். ஷாருக்கானின் இந்த மனிதாபிமானம் மிக்க செயலுக்கு அவருடைய ரசிகர்கள் மாற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.