நடிகர் ஷாருக்கான் தன்னுடைய செல்ல மகள் சஹானா கானுடன், ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்று, வழிபாடு செய்துள்ளது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

பாலிவுட் கிங் காங் என ரசிகர்களால் அழைக்கப்படும், ஷாருக் கான் 'ஜவான்' படத்தின் இமாலய வெற்றிக்கு பின்னர், தன்னுடைய அடுத்த படமான 'டன்கி' படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன், முதல் முறையாக இப்படத்திற்காக ஷாருக்கான் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்துள்ளார். மேலும் 'டன்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

Ajith Help: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரகசியமாக உதவிய அஜித்! பயில்வான் கூறிய ஆச்சர்ய தகவல்!

ஷாருக்கானை தொடர்ந்து, திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள அவரின் ஒரே மகளான சஹானா காணும், தந்தையுடன் ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளார். சஹானா கான் நடிப்பில் அண்மையில் ஜோயா அக்தரின் 'தி ஆர்ச்சீஸ்' திரைப்படம் வெளியானது. இதில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் பிரதிபலித்தார்.

பிரமாண்டமாக நடந்து முடிந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய விஷால்!

ஷாருக்கான் டிசம்பர் 12, அதாவது செவ்வாய் கிழமை அதிகாலையில் மா வைஷ்ணோ தேவியின் கோவிலுக்குச் சென்றிருந்தார். அவர் இந்த ஆண்டு மட்டும் மூன்று முறை வைஷ்ணோ தேவியை தரிசித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் நடித்த 'பதான்' மற்றும் 'ஜவான்' படங்கள் வெளியாவதற்கு முன்பு அவர் இந்த கோவிலுக்கு சென்றார். இதை தொடர்ந்து 'டன்கி' படத்தின் ரிலீசுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மீண்டும் மா வைஷ்ணோ தேவி கோவிலில் வழிபாடு செய்தது மட்டும் இன்றி சீரடியிலும் தரிசனம் செய்துள்ளார்.

Scroll to load tweet…