தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் புதிது புதிதாக வந்தாலும், நாகேஷ், தங்கவேல், செந்தில், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், போன்றவர்கள் இடத்தை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. தற்போது இவர்களின் இடத்தை மெல்ல மெல்ல நெருங்கி வருகிறார் யோகி பாபு என்று கூறலாம்.

இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நகைச்சுவை நடிகர் செந்தில். கடந்த சில வருடங்களாக திரையுலகை விட்டு விலகியே இருந்த இவர், மீண்டும் 'தானா சேர்ந்த  கூட்டம்' படத்தில் கடைசியாக நடித்தார். மேலும் சின்னத்திரையில் வெளியான 'ராசாத்தி' சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமல் இத்தனை  ஆண்டுகளாக இருந்த இவர், தற்போது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் இணைந்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:

மேலும் செய்திகள்: சிக்னல் கொடுத்தேனா? தவறாக நடக்க முயன்ற காமெடி நடிகரை கேரவனுக்கு அழைத்து சென்று தலை குனிய வைத்த பிரகதி!
 

நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பி உடன் இணைந்து ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்தேன். கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்பட்டேன். எனவே தான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன். அனைவரின் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி’ என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

இவர் ட்விட்டர்  தளத்தில் இணைந்ததற்கு பிரபலங்கள் முதல், ரசிகர்கள் வரை பலரும் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இவர்க்கு ஒரே  கிட்ட தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: மிக மோசமாக மாஃபிங் செய்து அசிங்க படுத்திய நபர்! பிரதமர் - முதலமைச்சருக்கு டேக் செய்து குமுறிய மீரா மிதுன்!
 

அதே நேரத்தில், நடிகர் செந்திலுக்கு, கவுண்டமணிக்கும் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டதால் இருவரும் சேர்ந்து  நடிப்பது இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் அதிகம் பரவி வந்த நிலையில், ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அதனை மறந்து, கவுண்டமணிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அவருடன் இருக்கும் கவர் போட்டோவை செந்தில் ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.