80களில் முன்னணி நடிகையாக இருந்த, பிரகதி சமீபத்தில் பேட்டி ஒன்றில், தன்னிடம் பிரபல காமெடி நடிகர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற விஷயத்தையும். பின் நடந்தவற்றையும் கூறியுள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், 1994- ஆம் ஆண்டு வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும்,  பின்பு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

திருமணம் செய்துகொண்டு சிலகாலம் சினிமாவிற்கு முழுக்கு போட்ட இவர், பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்தார். தற்போது அரண்மனை கிளி சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக, மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: மிக மோசமாக மாஃபிங் செய்து அசிங்க படுத்திய நபர்! பிரதமர் - முதலமைச்சருக்கு டேக் செய்து குமுறிய மீரா மிதுன்!
 

சமீபத்தில், இவர் தன்னுடைய மகனுடன் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்'  பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். 44 வயதில் இவர் போட்ட  நச் ஆட்டம் பார்பவர்களையே அசர வைத்தது. 

இந்நிலையில் இவர் கொடுத்த ஒரு பேட்டியில், இவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பிரபல காமெடியன் பற்றி பேசியுள்ளார். மூத்த காமெடி நடிகராக வலம்  வரும் அவர், அவருடன் நடித்த நாட்களில் தன்னிடம் மிகவும் சகஜமாக பழகினார். சில தினங்களில் அவர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டவிதம் எனக்கு புரிந்தது. அநாகரிகமாக அவர் பேசியது தன்னை அதிர்ச்சியாக்கியது. அதனை நான் அனைவர் மத்தியிலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

மேலும் செய்திகள்: குஷ்புவின் முதல் மகள் அவந்திகா இவ்வளவு ஜாலியான பெண்ணா? இதுவரை பார்த்திடாத இவரின் ரேர் புகைப்படங்கள்!
 

பின்னர் அவரை தனியாக அழைத்து, கேரவனுக்கு வர சொன்னேன். அங்கு அவரிடம் உங்களை தவறான நோக்கத்தில் நான் சிக்னல் கொடுத்தேனா என கேட்டதுமே அவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. வெக்கி  தலை குனிந்தார். இதை அனைவர் மத்தியிலும் கேட்டல், உங்களுக்கு அவமானம் என கண்டித்து அனுப்பியதாகவும், பின்னர் அவர் என்னிடம் தவறான நோக்கத்துடன் பழகவில்லை என தெரிவித்துள்ளார்.