Asianet News TamilAsianet News Tamil

"கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்".. சந்தானம் பாணியில் களமிறங்கிய சதிஷ் - Conjuring Kannappan ட்ரைலர் இதோ!

Conjuring Kannappan Trailer : பிரபல காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள Conjuring Kannappan படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Actor Sathish new movie Conjuring Kannappan Trailer out now ans
Author
First Published Nov 4, 2023, 2:48 PM IST | Last Updated Nov 4, 2023, 2:48 PM IST

அண்மையில் மறைந்த புகழ்பெற்ற பிரபல நடிகரும், திரைப்பட கதாசிரியருமான கிரேசி மோகன் அவர்களுடைய நாடகங்களில் நடிக்க துவங்கி, அதன்பின் சினிமா துறையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, இன்று காமெடியனாகவும், ஹீரோவாகவும் வளம் வரும் நடிகர் தான் சதீஷ். கடந்த 2006 ஆம் ஆண்டு கிரேசி மோகனுடைய திரைக்கதையில் வெளியான "ஜெர்ரி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சதிஷ். 

இந்நிலையில் நடிகர் சதிஷ் அவர்களுக்கு ஒரு பிரேக் கொடுத்த திரைப்படம் தான் கடந்த 2010 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான "தமிழ் படம்" என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆர்யாவின் மதராசபட்டினம், சிவகார்த்திகேயனின் மரினா, ஆரியின் "மாலை பொழுதின் மயக்கத்திலே", விக்ரமின் "தாண்டவம்" போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

இதுக்கு சேலை கட்டாமல் போஸ் கொடுத்திருக்கலாம்! கொசுவலை போன்ற புடவையில்.. திகட்டாத கவர்ச்சி காட்டும் லாஸ்லியா! 

இந்நிலையில் பிரபல லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் இந்த நவம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளது இப்படத்தின் சிறப்பு அம்சமாக உள்ளது என்றே கூறலாம். 

 

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, Dream Catcher என்ற ஒரு அழகு சாதனா பொருளில் உள்ள இறக்கையை பிய்த்து எடுத்ததால், கதையின் நாயகன் மற்றும் அவர் சொந்தங்களுக்கு கனவில் ஏற்படும் நிகழ்வுகள் நிஜத்திலும் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனையில் இருந்து நாயகனும் மற்றவர்களுக்கு தப்பித்தார்களா? என்பதே இந்த படத்தின் கதை.

உள்ளே வந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆன வைல்ட் கார்டு போட்டியாளர்! யார் தெரியுமா?

இந்த படத்தில் பிரபல நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் நடிகர்கள் நாசர், ஆனந்த்ராஜ், VTV கணேஷ், ரெடின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios