மறைந்த நடிகர் சரத்பாவுவின் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கும்மேலாகமருத்துவமனையில்சிகிச்சைபெற்றுவந்தபிரபல நடிகர்சரத்பாபுஇன்று காலமானார். பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததால் ஹைதராபாத்தில்உள்ளதனியார்மருத்துவமனையில்சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று அவரின் உயிர் பிரிந்தது.அவருக்குவயது 71. செப்சிஸ் என்ற அரியவகை நோய்மற்றும்பலஉறுப்புசெயலிழப்புகாரணமாகஅவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரின் உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள அவரின் இல்லத்தில் நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரஜினியின் எஜமானாக நடித்தாலும்; ரியல் லைஃப்பில் தோழனாக தோல் கொடுத்தவர் சரத்பாபு - இருவரின் நட்பு பற்றி தெரியுமா

நடிகர் சரத்பாபுவின் இயற்பெயர் சத்யம் பாபு தீட்சிதுலு. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1973 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர் பின்னர் K. பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் (1978) மூலம் பிரபலமானார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினியுடன் அவர் நடித்த படங்கள் பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து முறையே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க : ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.. சரத்பாபு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்