Asianet News TamilAsianet News Tamil

Vijay: விஜய் 100 ரூபாய் பிரியாணி சாப்பிடுவது சாத்தியமா..? ரஜினி ஒப்புக்கொண்ட உண்மைகள்..! வைரல் வீடியோ..!

Vijay: விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Actor Rajinikanth video about his lifestyle and simplicity goes viral
Author
Chennai, First Published Apr 13, 2022, 12:48 PM IST

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி, ரசிகர்கள் கொண்டாட துவங்கிவிட்டனர். 

விஜய்யின் பீஸ்ட்:

Actor Rajinikanth video about his lifestyle and simplicity goes viral

வளர்த்து வரும் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. விஜய் ரசிகர்கள் படத்தை பிளாக் பஸ்டர் என்று கொண்டாடி வருகின்றனர். எங்கு திரும்பினாலும் தளபதியின் போஸ்டர்கள், பேனர்கள் தான் உள்ளன.

படத்தை கொண்டாடும் ரசிகர்கள்:

Actor Rajinikanth video about his lifestyle and simplicity goes viral

சன் பிக்சர் தயரிப்பில்,  பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜ ஹெக்டே தளபதியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். விஜய்யின் கத்தி, மாஸ்டர், படங்களுக்கு இசையமைத்த அனிருத் இந்த பீஸ்ட்  படத்திற்கு இசையமைத்துள்ளார். 

படத்திற்கு, கலவையான விமர்சனங்கள்:

Actor Rajinikanth video about his lifestyle and simplicity goes viral

பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகி உள்ளது. படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் பெரும் சாதனை படைத்தது வருகிறது. 

விஜய் பேட்டி:

Actor Rajinikanth video about his lifestyle and simplicity goes viral

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் விஜய் சன் டிவிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் இயக்குனர் நெல்சன் தான் விஜய்யிடம் கேள்விகள் கேட்டார்.

அவர் தன்னுடைய கேள்வியில், விஜய் ஒருமுறை நெல்சனை இரவு விருந்துக்கு அழைத்து இருக்கிறார். அப்போது, சாப்பிடலாமா என கேட்டு விட்டு விஜய் 100 ரூபாய்  பிரியாணியை சாப்பிட்டாராம். எப்படி இவ்ளோ சிம்பிளாக இருக்கீங்க என நெல்சன் கேட்டார். விஜய்யும் அந்த பிரியாணி நன்றாக ருசியாக இருக்கும், இந்த சிம்ப்ளிசிட்டி போதும் என கூறினார்.  

மேலும் படிக்க ....Beast box office: அஜித், சூர்யா படங்களின் மொத்த வசூலை..ரிலீசுக்கு முன்பே முறியடித்த பீஸ்ட்! குஷியில் ரசிகர்கள்

வைரலாகும் ரஜினி வீடியோ:

Actor Rajinikanth video about his lifestyle and simplicity goes viral

இந்நிலையில், ரஜினி 2.0 படம் ரிலீஸ் சமயத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அவர், அவரிடம் தொகுப்பாளர் அர்ச்சனா கேள்வி கேட்க, ''சிம்ப்ளிசிட்டி என்றால் என்ன என புரியவில்லை. நான் போவது BMW காரில்,  இருப்பது போயஸ் கார்டன் வீட்டில், சாப்பிட போவதெல்லாம் 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டலில், ஆனால், நான் சிம்பிள் என சொல்வது எப்படி என புரியவில்லை" என ரஜினி கூறியுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவைபார்க்கும் நெட்டிசன்கள், விஜய் உண்மையிலேயே சிம்பிளானவரா?என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios