நூறு சதவிகிதம் கப்பு நமதே! சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "நூறு சதவிகிதம் கப்பு நமதே" என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்தியா நியூசிலாந்து மோதிய உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், இறுதிப்போட்டியில் கோப்பை வெல்லப்போவது இந்தியா தான் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர். பின்னர் இன்று அவர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர். மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.
குழந்தைகளை நான் பாத்துக்குறேன்... மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த அதிசய கணவர்!
குறிப்பாக நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர்களான 11 வயது சிறுமி ஹாசினிகா மற்றும் அவரது 9வது தங்கை லட்சுமி ஸ்ரீ இருவரும் விமான நிலையத்தில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து மகிழ்ந்தனர். அப்போது ரஜினிகாந்த் அவர்கள் கொடுத்த பூங்கொத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுடன் உரையாடி, புகைப்படம் எடுத்துகொண்டனர்
பின்னர், விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, "நூறு சதவிகிதம் கப்பு நமதே" என்று கூறிவிட்டுச் சென்றார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டு மின் கட்டணத்தை பாதியா குறைக்க முடியும்! இந்த ஐடியாவை ட்ரை பண்ணிப் பாருங்க!