பிரபல நடிகர் ராஜேஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், பல்வேறு தரப்பட்ட வேடங்களில் ரசிகர்களை கவர்ந்தவர்.

Actor Rajesh Family : பிரபல நடிகர் ராஜேஷ், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியுசி, பச்சையப்பாஸ் கல்லூரியில் படித்தவர், திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கன்னிப் பருவத்திலே படத்தின் மூலம் திரைப்படத்தில் நடக்க தொடங்கிய அவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய பாத்திரங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். 

ரசிகர்களை கவர்ந்த நடிகர் ராஜேஷ்

ஹீரோ முதல் குணச்சித்திர வேடங்கள் வரை தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் காமராஜ் என்ற கதாபாத்திரத்தில் ஆசிரியராக நடித்திருப்பார். அனைவரையும் ரசிக்க வைத்த கதாப்பாத்திரமாக அந்த வேடம் அமைந்திருக்கும். தமிழின் மீது அதிகமான ஆர்வம் உள்ள நடிகர் ராஜேஷின் தமிழ் உச்சரிப்பு அருமையாக இருக்கும். இந்த நிலையில் திடீர் ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலமானார். ராஜேஷ்க்கு 1983 ஆம் ஆண்டு சில்வியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கு திவ்யா மற்றும் தீபக் என்ற இரண்டு உள்ளது. ராஜேஷின் மனைவி சில்வியா கடந்த 2011ஆம் ஆண்டு இறந்துள்ளார். 

கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ராஜேஸ் மகன் 

நடிகர் ராஜேஷ் மகன் தீபக் 2014 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். 35 வயதாகும் ராஜேஷின் மகன் தீபக் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என போராடி வருகிறார். அவர் நடித்த படத்தையும் திரைக்கு கொண்டுவர முடியாத நிலையில் தனது அப்பாவுக்கு மட்டும் போட்டுக் காட்டியதாகவும் வேதனையோடு தீபக் தெரிவித்தார். மேலும் அடுத்த வாரம் தன்னுடைய நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், தனது தந்தை இறந்ததை நினைத்து பரிதவித்து வருகிறார். மறைந்த பிரபல இயக்குநரான மகேந்திரனின் உறவினர் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.