உதவி பெறுபவர்கள் தான் காலில் விழ வேண்டுமா? அதிரடி முடிவெடுத்த ராகவா லாரன்ஸ்
இன்று நான் எனது ரசிகர்களை சந்தித்து இந்த மாற்றத்தை கொண்டு வர சிறிய முயற்சி எடுக்கிறேன், உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை. இது தொடர்பான காணொளியை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
பிரபல நடன இயக்குனராக இருந்து தற்போது முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் மாறி உள்ளார். ராகவா லாரன்ஸ் இவர் இயக்கிய முனி சீரிஸ் படங்கள் ராகவாவிற்கு நல்ல கை கொடுத்தது. அதை அடுத்து காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் இயக்கி காட்டினார் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகியின் இரண்டாவது பாகத்தில் நாயகனாக கமிட்டாகி உள்ளார். பி வாசு இயக்கும் இந்த படத்தை வடிவேலுவும் உடன் நடிக்கிறார். படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றும் முயற்சிகள் இறங்கியுள்ள ராகவா லாரன்ஸ் சமீபத்தில் இது குறித்தான புகைப்படங்களை வெளியிட்டதோடு, தான் நடத்தி வரும் டிரஸ்டடுக்கு இனி யாரும் பண உதவி செய்ய வேண்டாம். தான் அதிக படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால், தனது பணத்தை வைத்தே மக்களுக்கு உதவி செய்ய முடியும் என நம்புகிறேன். இதுவரை உதவி செய்த அனைவருக்கும் நன்றி. அனைவரையும் கட்டாயம் ஒரு நாள் சந்திக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...பள்ளி மாணவிகளை சந்தித்த கமல் ஹாசன்..வைரலாகும் வீடியோ இதோ
ராகவா லாரன்ஸ் தனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை மக்களுக்கு உதவி செய்வதில் செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலைகள் தற்போது ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள குறிப்பில் புதிய முயற்சி குறித்து எழுதியுள்ளார். அதில், இனி நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி.
நான் யாருக்கு உதவி செய்தாலும் என் காலில் விழக்கூடாது, அவர்கள் காலில் விழுந்து என் சேவையைச் செய்வேன்.
எனக்குள் ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று நான் முதல் அடி எடுத்து வைக்கிறேன். உதவி கேட்பதற்காக ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுவதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன், உதவி பெற்ற பிறகு அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை, அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.... தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை ..வெளியானது தற்கொலை கடிதம்
மேலும் ஒரு குடும்பம் தங்கள் குழந்தைகளுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சைக்காக என்னிடம் வரும்போது, உதவி கேட்டு என் காலில் விழுந்து விடுகிறார்கள். நான் விலகிச் செல்கிறேன், குழந்தையின் முகத்தைப் பார்க்கிறேன், உதவிக்காக பெற்றோர்கள் காலில் விழுந்தவுடன் குழந்தை உடனடியாக அழத்தொடங்குகிறது. பெற்றோர்களும் குழந்தைகளும் படும் வேதனையை என்னால் புரிந்து கொள்ளவும், உணரவும் முடிகிறது, ஏனென்றால் எந்த தந்தையும் தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் ஒரு ஹீரோவாக இருக்க தான் விரும்புவார். பணக்காரர்களிடம் பணம் இருப்பதால், அவர்களின் காலில் விழுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன். மேலும், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என் காலில் விழ வைக்கிறார்கள். கடவுளும் குழந்தைகளும் ஒன்று என்று நான் நம்புகிறேன்.
சில சமயங்களில், நான் கிராமங்களுக்குச் சென்று என் தாய் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவும்போது, அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். இது நியாயமா? அவர்கள்தான் எனக்கு தூய ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே இனிமேல் நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன். எனது சிறிய ஈகோவும் மறைந்துவிடும் என்று நம்புகிறேன். இன்று நான் எனது ரசிகர்களை சந்தித்து இந்த மாற்றத்தை கொண்டு வர சிறிய முயற்சி எடுக்கிறேன், உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை. இது தொடர்பான காணொளியை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.