சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் விக்ரம் நூறாவது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்குள்ள பெண்கள் பள்ளிக்கு விசிட் செய்துள்ளார் கமலஹாசன்.

விஸ்வரூபம் 2 படத்தை தொடர்ந்து நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு கமலஹாசனின் விக்ரம் படம் வெளியானது. ரூ.400 கோடிகளுக்கு மேல் வசூலை கொடுத்த இந்த படத்தை கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். முன்னதாக கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் வெளியாகி இருந்தது.இராணுவ உளவாளியான கமலஹாசன் தனது மகனை கொலை செய்த போதை கும்பலை கூண்டோடு அழிக்கும் கதைகளத்தை கொண்டிருந்த அந்த படத்தில் விஜய் சேதுபதி பகத்பாசில் முக்கிய வேடத்திலும், கிளைமாக்ஸில் சூர்யா ரோலக்ஸ் வேடத்திலும் நடித்திருந்தனர்.

Scroll to load tweet…

மேலும் செய்திகளுக்கு....தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை ..வெளியானது தற்கொலை கடிதம்

இதில் நடித்த அனைவருக்கும் மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது விக்ரம். அதோடு கமலின் சாலச் சிறந்த படம் என்கிற பெயரை பெற்றது மட்டுமல்லாமல் 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் உலகநாயகனை கொண்டு சேர்த்தது. விக்ரம் தற்போது நூறாவது நாள் கொண்டாட்டத்தில் உள்ளது. சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் விக்ரம் நூறாவது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்குள்ள பெண்கள் பள்ளிக்கு விசிட் செய்துள்ளார் கமலஹாசன்.

Scroll to load tweet…

மேலும் செய்திகளுக்கு...இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே!..கேமராவை பார்த்ததும் உடையை இறக்கி விட்ட சர்ச்சை நடிகை

கமலஹாசனை கண்ட மாணவிகள் உற்சாக கூச்சலிடம் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் தனது முதல் தேர்தலை சந்தித்தார் கமல்ஹாசன். அதற்காக கோவையில் சூறாவளி சுற்றுப்பணம் மேற்கொண்டார். இருந்தும் அந்த தொகுதியில் மிக பிரபலமான பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி 1300 வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் கோவையில் கலக்கி உள்ளார் கமல்.

தற்போது கமலஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஷங்கர் இயக்கும்இந்த படத்தில் 14 மொழிகளில் வசனம் பேசி நடித்துள்ள கமலஹாசன். சமீபத்தில் பத்து நிமிட நான் ஸ்டாப் காட்சியை ஒரே டேக்கில் நடித்த அசத்தியுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.