Asianet News TamilAsianet News Tamil

ராகவா லாரன்ஸை நோக்கி எழும் கேள்விகள்: குடிமகன்கள் செயலால் மனம் குமுறி வெளியிட்ட தகவல்!

கோலிவுட் திரையுலகில், எந்த ஒரு முன்னணி நடிகரும் கொடுக்காத பெரிய தொகையை நிதியாக கொடுத்து தன்னுடைய உதவி மனப்பான்மையை வெளிக்காட்டியவர் பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். அடுத்ததாக தான் நடிக்க ஒப்பந்தமான 'சந்திரமுகி 2' படத்திற்காக அட்வான்ஸாக பெற்ற, மூன்று கோடியை சற்றும் யோசிக்காமல் அள்ளி  கொடுத்தார்.
 

actor raghava lawrence emotional message for drunker
Author
Chennai, First Published May 20, 2020, 4:39 PM IST

கோலிவுட் திரையுலகில், எந்த ஒரு முன்னணி நடிகரும் கொடுக்காத பெரிய தொகையை நிதியாக கொடுத்து தன்னுடைய உதவி மனப்பான்மையை வெளிக்காட்டியவர் பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். அடுத்ததாக தான் நடிக்க ஒப்பந்தமான 'சந்திரமுகி 2' படத்திற்காக அட்வான்ஸாக பெற்ற, மூன்று கோடியை சற்றும் யோசிக்காமல் அள்ளி  கொடுத்தார்.

இதை தொடர்ந்து, துப்புரவு பணியாளர்களுக்கு, ஊரடங்கால் உணவிற்கு கஷ்டப்படுபவர்களுக்கு, திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு என கணக்கு பார்க்காமல் உதவிகள் செய்து வருகிறார்.

actor raghava lawrence emotional message for drunker

ஒருபக்கம் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் தமிழக அரசு, மற்றொரு பக்கம் தற்போது டாஸ்மார்க் கடைகளையும் திறந்துள்ளது. இதனால் கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே... சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு, குடிமகன்கள் பலர் குடியும் கும்மாளமாக உள்ளனர். இது தான் ராகவா லாரன்ஸ் உதவி சரிதானா என அவரை சுற்றி உள்ள நண்பர்கள் மற்றும் தாய் உட்பட பலரை கேள்வி எழுப்ப வைத்துள்ளது. 

மேலும் செய்திகள்: அடேங்கப்பா... அந்த இடத்தில் எம்மா பெரிய டாட்டூ..! ரீஎண்ட்ரிக்கு வெறித்தனமாக தயாரான லட்சுமி மேனன்!
 

 சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமா? என்று தனது நண்பர்கள் அறிவுறுத்தி வருவதாகவும், இவ்வாறு அறிவுறுத்தியவர்களில் தனது தாயாரும் ஒருவர் என்றும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 

actor raghava lawrence emotional message for drunker
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது.... "வணக்கம் நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, டாஸ்மாக் ஒரு சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. டாஸ்மாக்கை நோக்கி கூட்டம் அதிகம் செல்வதைக் கண்டதும் எனது அம்மா மற்றும் என்னுடன் பணியாற்றும் சில நண்பர்கள் என்னிடம் சில கேள்விகளை கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்: தலையில் உலக அழகி கிரீடத்துடன் தரையில் அமர்ந்து சாப்பிடும் ஐஸ்வர்யா ராய்! 25 வருடத்திற்கு பின் வெளியான போட்டோ!
 

‘நாங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்ய மிகவும் கடினமாக உழைக்கிறோம். ஆனால் பொறுப்பற்ற முறையில் பலர் டாஸ்மாக் சென்று குடித்து தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றார்கள். இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா? என்று கேட்கின்றார்கள்.

actor raghava lawrence emotional message for drunker

மேலும் செய்திகள்: 18 + மட்டும் பார்க்கவும்! உடலில் ஒட்டு துணி இன்றி... டார்ச் லைட் ஒளியில் எடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகை!
 

என் அம்மா மற்றும் நண்பர்கள் மட்டுமல்ல. எனக்கு உதவி செய்பவர்கள் கூட நாம் சரியான நபர்களுக்குத்தான் உதவி செய்கிறோமா? நமது சேவையால் உண்மையில் பலன் இருக்கின்றதா? என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் குடிகாரர்களால் நமது சேவை நிறுத்தப்பட்டால் அந்த குடிகாரர் குடும்பத்தில் அவரது தாய், மனைவி மற்றும் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள். மேலும் குடிக்காத பல ஆண்களின் குடும்பத்தினர்களும் நாம் சேவையை நிறுத்திவிட்டால் பாதிக்கப்படுவார்கள். எனவே தயவுசெய்து சேவையை நிறுத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அதே நேரத்தில் அனைத்து குடிகாரர்களுக்கும் எனது சிறிய கோரிக்கை என்னவெனில் குடிப்பதற்கு முன், உங்கள் குழந்தையின் கண்ணீரைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்’ என்று கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios