பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபல நடிகையும், உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராய்யின், 25 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

உலக அழகி, நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 21 ஆவது வயதில், 1994ஆம் ஆண்டு, ஆர்டிடெக்ச்சர்  படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, உலக அழகி பட்டத்தை பெற்றார்.

மொத்தம் 87 நாட்டைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், இந்தியாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யாராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், தன்னுடைய அம்மாவுடன், நடிகை ஐஸ்வர்யா ராய் தரையில்.... தலையில் உலக அழகி கிரீடத்துடன் அமர்ந்து மிகவும் எளிமையாக உணவை சாப்பிடுகிறார்.

இந்த புகைப்படம் தற்போது பார்ப்பவர்களுக்கு நடிகை ஐஸ்வர்யாராய் இவ்வளவு எளிமையான பெண்ணா என வியக்க வைத்துள்ளது.  இருவர் படத்தின் மூலம், மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகமாகி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்,  திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றபின் கூட தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக நீண்ட இடைவெளிக்குப்பின், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, நயன்தாரா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இணைந்து நடித்த வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பிரச்சினை காரணமாக தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் படபிடிப்பு மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கலாம்