பாஜக-வில் இணைந்த வேகத்தில்... நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம் பிடித்த பிரபல நடிகர்!
தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் 'யாகாவாராயினும் நாகாக்க' ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேர் கொண்ட பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் 'யாகாவாராயினும் நாகாக்க' ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேர் கொண்ட பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்: நடிகை ஷகிலாவின் மகள் இவரா? 'குக் வித் கோமாளி' அஷ்வின் பற்றி உணர்வுபூர்வமாக பதிவிட்ட மில்லா!
80 களில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. தமிழில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'குரு' என்ற படத்திலும் 'யாகாவராயினும் நாகாக்க' என்ற தமிழ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் எம்பியாக இருந்தவர்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் இவரது பெயர் அடிபட்டதால் எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன், மும்பையில் மிதுன் சக்ரவர்த்தியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. அதனால் மிதுன் சக்ரவர்த்தி, பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் செய்திகள்: ஒல்லி இடையை ஒட்டி உறவாடும் மெல்லிய செயின்.. எடுப்பாய் நின்று போஸ் கொடுத்து ஏக்கப்பெருமூச்சு விட வைத்த சாக்ஷி!
இந்நிலையில் பாஜக பொதுச்செயலாளர் கைலஷ் விஜய் வர்கியாவை மிதுன் சக்கரவர்த்தி சந்தித்து கடந்த வாரம் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். மேலும் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி, பாஜகவுக்கு ஆதரவு பிரதமர் மோடி கொல்கத்தாவுக்கு வருகை தந்த படை அணிவகுப்பு மைதானத்தில் மிதுன் சக்கரவர்த்தி கலந்துகொண்டார். பிரதமர் மோடியும் மிதும் சக்ரவர்த்தியை வரவேற்பதாக பேசினார்.
மேலும் செய்திகள்: தம்பி அஜித்... பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்! பிரபல அரசியல் தலைவர் வாழ்த்து!
இந்நிலையில் பாஜகவில் இணைந்த வேகத்தில், நட்சத்திர பேச்சாளராகவும் மாறியுள்ளார் மிதுன் சக்கரவர்த்தி. இன்று வெளியிட பட்ட பாஜக நட்சத்திர பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அமித் மால்வியா, ஆகிய 40 பேரில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.