தம்பி அஜித்... பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்! பிரபல அரசியல் தலைவர் வாழ்த்து!
ஏற்கனவே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது... நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திரையுலகையும் கடந்து கார் மற்றும் பைக் ரேஸ், எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு அட்வைஸர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ள தல அஜித், இந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று கெத்து காட்டியுள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தல அஜித் கலந்துகொண்டு டாப் 10 இடங்களுக்குள் வந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
கடந்த சில நாட்களாகவே தல அஜித் சென்னையில் ரைபிள் பயிற்சி அகாடமியில் துப்பாக்கியும் கையுமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. இந்நிலையில், தமிழ்நாடு 46-வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள, ஒரு வாரமாக தீவிர பயிற்சி எடுத்து வந்த அஜித், 3 தங்க பதக்கம் உட்பட 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
தோட்டாக்களை தெறிக்கவிட்டு தங்கம் வென்ற தல அஜித்திற்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது... நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில். "சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தம்பி அஜித் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல் , இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத்திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.
இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜித் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்! என தெரிவித்துள்ளார்.