- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கொஞ்ச நேரத்துல சாவு பயத்த காட்டிய கார்த்திக்; மீண்டும் கம்பி எண்ண சென்ற மூவர் கூட்டணி!
கொஞ்ச நேரத்துல சாவு பயத்த காட்டிய கார்த்திக்; மீண்டும் கம்பி எண்ண சென்ற மூவர் கூட்டணி!
Karthigai Deepam 2 Serial 1056 Episode Highlights : வீடு, கார் என்று அடுத்த இடங்களில் பாம் வைத்து மூவர் கூட்டணிக்கு கார்த்திக் கொஞ்ச நேரத்திலேயே சாவு பயத்தை காட்டிவிட்டார்.

கார்த்திகை தீபம் 2 சீரியல் எபிசோடு
ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோரது மூவர் கூட்டணிக்கு கொஞ்ச நேரத்தில் கார்த்திக் சாவு பயத்தை காட்டிவிட்டார். கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்லவே, அவரும் கோபத்தில் கார்த்திக்கை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். பிறகு ரேவதியும் கார்த்திக் உடன் கிளம்பிய போது துப்பாக்கியை காட்டி பிளாக்மெயில் செய்தார். கார்த்திக் நல்லவராச்சே அதனால் இப்போதைக்கு நீ உன்னுடைய வீட்டில் இரு என்று சொல்லிவிட்டு சென்றார்.
கார்த்திகை தீபம் 2 சீரியல்
இதற்கிடையில் கும்பாபிஷேகத்தில் Bomb வைத்த குற்றத்திற்காக காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கார்த்திக் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது தெரிந்து மூவரும் போலீஸ் லாக்கப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கு முக்கிய காரணம் வேறொருவர் நான் தான் கோயிலில் Bomb வைத்தேன் என்று சொல்லி போலீசில் சரண்டர் ஆனார். இதனால் மூவர் கூட்டணி விடுவிக்கப்பட்டனர்.
வீட்டிலும் பாம்ப், காரிலும் பாம்ப்
லாக்கப்பில் இருக்கும் போதே சாமூண்டீஸ்வரியை போட்டுத்தள்ள அடியாட்களை அனுப்பி வைத்தார் காளியம்மாள். ஆனால், கார்த்திக் அவர்களை அடித்து துவம்சம் செய்து மாமியாரையும், குடும்பத்தையும் காப்பாற்றினார். மூவர் கூட்டணி லாக்கப்பிலிருந்து வெளியில் வந்தது குறித்து தெரிந்து கொண்ட கார்த்திக் காளியம்மாள் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்கு பாம்ப் வைத்தார். அதோடு காருக்கும் பாம்ப் வைத்தார்.
சாவு பயத்தில் மூவர் கூட்டணி
லாக்கப்பில் இருக்கும் போதே சாமூண்டீஸ்வரியை போட்டுத்தள்ள அடியாட்களை அனுப்பி வைத்தார் காளியம்மாள். ஆனால், கார்த்திக் அவர்களை அடித்து துவம்சம் செய்து மாமியாரையும், குடும்பத்தையும் காப்பாற்றினார். மூவர் கூட்டணி லாக்கப்பிலிருந்து வெளியில் வந்தது குறித்து தெரிந்து கொண்ட கார்த்திக் காளியம்மாள் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்கு பாம்ப் வைத்தார். அதோடு காருக்கும் பாம்ப் வைத்தார்.
பஞ்சாயத்து ஆபிஸில் சாமுண்டீஸ்வரி
ஆனால், அங்கு இன்ஸ்பெக்டர் அவர்களை கைது செய்யவில்லை. ஏற்கனவே கோயில் கும்பாபிஷேகத்தில் பாம்ப் வைத்தது நான் தான் என்று ஒருத்தன் சரண்டர் ஆன நிலையில் அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இனி உங்களை எல்லாம் கைது செய்ய முடியாது என்று சொன்னார். இதைத் தொடர்ந்து எங்கள் மூவரையும் கைது செய்ய ஒரு காரணம் வேண்டும் அல்லவா என்று கூறி முத்துவேல் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்தார்.
காளியம்மாள் சிவனாண்டி சந்திரகலா பிளான்
அதன் பின்னர் என்ன போலீசையே அடித்துவிட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் அவர்கள் மூவரையும் கைது செய்து லாக்கப்பில் அடைந்தார். மகிழ்ச்சியோடு லாக்கப்பிற்கு சென்ற மூவர் கூட்டணி அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இவர்கள் மூவரும் லாக்கப்பில் இருக்கும் நிலையில் சந்திரகலா தனது அக்காவை பழி வாங்க பிளான் போட்டார். முதல் முறையாக பஞ்சாயத்து ஆபிஸிற்கு வந்த சாமூண்டீஸ்வரியை லஞ்ச வழக்கில் கைது செய்ய ஏற்பாடுகள் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு துறைக்கு போன் போட்ட சந்திரகலா
இதற்காக யார் என்று தெரியாத இருவரிடம் ஸ்வீட் பாக்ஸ் மாதிரியான ஒன்றில் கோல்டு பிஸ்கட்டை மறைத்து வைத்து தனது அக்காவிடம் கொடுக்கும்படி கூறினார். மேலும், உடனே லஞ்ச ஒழிப்பு துறைக்கும் போன் போட்டார். இந்த மாதிரி பஞ்சாயத்து தலைவர் லஞ்சம் வாங்குகிறார் என்று குற்றம்சாட்டினார். அதோடு கார்த்திகை தீபம் 2 சீரியல் எபிசோடு முடிந்தது. இனி இன்று என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.