நடிகை ஷகிலாவின் மகள் இவரா? 'குக் வித் கோமாளி' அஷ்வின் பற்றி உணர்வுபூர்வமாக பதிவிட்ட மில்லா!
கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்ட, நடிகை ஷகிலாவின் இமேஜை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி வேறுவிதமாக மாற்றி விட்டது. அவரை அம்மா என்று நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் அழைக்க, ரசிகர்களும் ஷகிலா அம்மா என்றே அழைக்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் இவரது மகள், மில்லா அஷ்வினுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து, உருக்கமாக பதிவிட்டுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம், மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை துவங்கியுள்ளனர் நடிகை ஷகிலா.
இவர் சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, தன்னுடைய மகள் என மில்லா என்பவரை அறிமுகம் செய்தார்.
மில்லா ஒரு ஃபேஷன் டிசைனர். மற்றும் மாடலாகவும் உள்ளார்.
ஷகிலா கலந்து கொண்ட காமெடி நிகழ்ச்சியில், குக் வித் கோமாளி அஷ்வினும் கலந்து கொண்டார்.
தற்போது மில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அஸ்வின் குறித்து மிகவும் உருக்கமாக ஒரு பதிவை போட்டுள்ளார்.
என்னுடைய இன்னொரு அம்மாவுக்கு பிறந்த சகோதரர்’ என்று உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவும் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் பலரும் இது ஷகிலாவின் மகளா? என வியப்புடன் பார்த்து வருகிறார்கள்.
இவர் விதவிதமாக எடுத்து கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மில்லாவின் கியூட் புகைப்படம்
மாடலிங் துறையில் அசத்தி வரும் மில்லா