Makkal Selvan Vijaysethupathi : தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக பயணித்து வந்தாலும், கடந்த 2012ம் ஆண்டு வெளியான Pizza திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகர் தான் விஜய்சேதுபதி.

தமிழ் திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாக சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தவர் தான் பிரபல நடிகர் விஜய் சேதுபதி. "புதுப்பேட்டை", "வெண்ணிலா கபடி குழு", "நான் மகான் அல்ல", "பலே பாண்டியா", "தென்மேற்கு பருவக்காற்று" மற்றும் "சுந்தரபாண்டியன்" உள்ளிட்ட திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த அவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. 

அதனைத் தொடர்ந்து "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "சூது கவ்வும்", "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா", "ரம்மி", மற்றும் "பண்ணையாரும் பத்மினியும்" போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றியடைந்த நிலையில், விஜய் சேதுபதி மக்களின் செல்வனாக உருமாறினார். கடந்த 12 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

38 வயதில் இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி ! வைரலாகும் நிக்கோலய் முதல் மனைவி மற்றும் 15 வயது மகள் புகைப்படம்!

பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், கேமியோ கதாபாத்திரங்களும் ஏற்று நடித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் என்னுடைய இத்தனை வருட திரை வாழ்க்கையில் இப்பொழுது தான் நான் எப்படி "நோ" சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். 

தற்பொழுது மகாராஜா என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறேன் அந்த படத்தின் பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட்டது. அதேபோல மிஷ்கின் அவர்களுடைய "டிரெயின்" திரைப்படம் அதிவிரைவாக நடந்து கொண்டிருக்கிறது. மிஷ்கின் என்னிடம் மொத்தம் எட்டு கதைகளை சொன்னார், அதில் இந்த கதையை நான் தேர்வு செய்தேன். இந்த இரண்டு படங்களை தவிர வேறு படங்களை நான் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Tamannaah: திருமணத்திற்கு முன்பே... கழுத்தில் மாலையோடு காசி விஸ்வநாதரை வழிபட்ட தமன்னா! வைரலாகும் போட்டோஸ்!