நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் “அவள் பெயர் ரஜ்னி” என்கிற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம், தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்று... தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த அந்தாலஜி திரைப்படமான 'நவராசா', 'விக்ரம்' மற்றும் கடைசியாக இயக்குனர் பா.ரஞ்சித் நடிப்பில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது போன்ற பிரமாண்ட படங்களில் இவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது.
இதை தொடர்ந்து, தற்போது நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாள்ஸ் ஜெயராம் நடிக்கும் பரப்பரான இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படம் “அவள் பெயர ரஜ்னி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உதயநிதிக்கு ஜோடியாக நிமிர் படத்தில் நடித்த நமீதா பிரமோத் காளிதாசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
49 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரசாந்த்..! எப்போது கல்யாணம்? தந்தை கூறிய குட் நியூஸ்!
மிகவும் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ள, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான கச்சிதமான போஸ்டராக ஆவலை தூண்டும் வகையில் இப்போஸ்டர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பொள்ளாச்சி, கொச்சின், ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் வினில் ஸ்கரியா வர்கீஸ். ஸ்ரீஜித் K.S மற்றும் பிளெஸ்ஸி ஸ்ரீஜித் ஆகியோர் இணைத்து இப்படத்தை தயாரித்துள்ளனர். RR விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள. 4 மியூசிக்ஸ் குழுவினர் இசையமைத்துள்ளார். தீபு ஜோசப் இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
