Asianet News TamilAsianet News Tamil

நாளை வெளியாகும் தனுஷின் கேப்டன் மில்லர்.. புதிய சாதனை படைக்கபோகுது - லைகா வெளியிட்ட அசத்தல் தகவல்!

Captain Miller : கேப்டன் மில்லர் திரைப்படம், பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக நாளை ஜனவரி 12ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது அதன் தயாரிப்பு நிறுவனம்.

Actor Dhanush Captain Miller first tamil movie to release in imax laser and 12 channel sound experience ans
Author
First Published Jan 11, 2024, 10:38 PM IST

தமிழ் திரை உலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல நடிகர் மாதவன் நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான "இறுதிச்சுற்று" என்கின்ற திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக களம் இறங்கியவர் தான் அருண் மாதேஸ்வரன். அதன்பிறகு பிரபல நடிகர் வசந்த் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான "ராக்கி" என்ற திரைப்படத்தை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான "சாணிக்காயிதம்" என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த அவர், நாளை ஜனவரி 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள பிரபல நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தோடு இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2024’ விவசாயத்துறையில் சாதனை படைத்த 5 பேரை கவுரவித்து கார்த்தி!

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல பிரபல நடிகைகள் அதிதீ பாலன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படத்தின் வெற்றியை பொறுத்து "கேப்டன் மில்லர்" படத்தின் இரண்டாம் பாகமும், அதைத் தொடர்ந்து மூன்றாம் பாகமும் உருவாகும் என்றும் இயக்குனர் மாதேஸ்வரன் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சில தொழில்நுட்ப வேலைகள் முடியாமல் இருந்த காரணத்தினால் பொங்கல் ரேசில் கேப்டன் மில்லர் தற்பொழுது களமிறங்குகிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தை உலகெங்கும் விநியோகித்து வரும் பிரபல லைகா நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலின் IMAXல் லேசர் உதவியோடு 12 சேனல் சவுண்ட் சிஸ்டத்தில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.இந்த புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படமாக கேப்டன் மில்லர் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சன் டிவி முக்கிய சீரியலில் இருந்து திடீர் என விலகிய ஹீரோ..! அதிர்ச்சி காரணத்தால் பதறிய ரசிகர்கள்..!

Follow Us:
Download App:
  • android
  • ios