- Home
- Gallery
- சன் டிவி முக்கிய சீரியலில் இருந்து திடீர் என விலகிய ஹீரோ..! அதிர்ச்சி காரணத்தால் பதறிய ரசிகர்கள்..!
சன் டிவி முக்கிய சீரியலில் இருந்து திடீர் என விலகிய ஹீரோ..! அதிர்ச்சி காரணத்தால் பதறிய ரசிகர்கள்..!
சன் டிவி சீரியலில் நடித்து வரும் அக்னி திடீர் என, 'மலர்' சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

பல இல்லத்தரசிகள் மனதை கொள்ளைகொண்ட 'மலர்' சீரியலில் இருந்து, ஹீரோவாக நடித்து வரும் அக்னி வெளியேறுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். சன் டிவியில் திங்கள் முதல் சனி கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் மலர். இயக்குனர் ஜவஹர் இயக்கி வரும் இந்த தொடர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
சித்தி சீரியலில் நடித்து பிரபலமான ப்ரீத்தி சர்மா ஹீரோயினாக நடிக்க, ஜீ தமிழ் செம்பருத்தி தொடர் மூலம் பிரபலமான தொகுப்பாளர் அக்னி ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அகிலா பிரகாஷ், நிஹாரிகா ஹர்ஷு, ரவிகாந்த், தேவ் ஆனந்த், பார்வதி, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பின்பு தன்னுடைய காதலன் வெறுக்க துவங்கிய நிலையில், அதை எப்படி மலர் சமாளித்து காதலன் மனதை மாற்றி அவருடன் சேர்ந்து வாழ போகிறார் என்கிற விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் மலர் சீரியல் இருந்து விலகுவதை அக்னி கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "எதிர்பார்த்திடாத வகையில் எனக்கு அடிபட்டு இருக்கிறது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு சில நாட்கள் ஆகும், எனவே சீரியல் சுமுகமாக செல்வதற்காகவும் மலர் சீரியலில் இருந்து விலகும் இடத்தில் நான் இருக்கிறேன். இது நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. சன் டிவிக்கும் சீரியலின் தயாரிப்பு நிறுவனமான விஷன் டைம் நிறுவனத்திற்கும் நன்றி. மேலும் சீரியலை பார்த்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். அடி பட்டதால் விலகுகிறேன் என, அக்னி கூறியுள்ளதால் ரசிகர்கள் பதறியபடி அவருக்கு என்ன ஆனது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.