Raayan Movie Review : 50வது படத்தில் அதகளப்படுத்தினாரா தனுஷ்? ராயன் படத்தின் விமர்சனம் இதோ
தனுஷ் இயக்கியதோடு மட்டுமின்றி அவர் ஹீரோவாகவும் நடித்துள்ள அவரின் 50வது திரைப்படமான ராயன் படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ராயன். இது அவரின் 50வது படமாகும். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இயக்கியும் உள்ளார் தனுஷ். பா.பாண்டி படத்திற்கு பின் தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் இது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
ராயன் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி இருக்கிறது. இப்படத்தின் கதையை 14 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டாராம் தனுஷ். இதைத்தான் முதல் படமாக அவர் இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் கொஞ்சம் ஆக்ஷன் அதிகம் என்பதால் பேமிலி ட்ராமா படமான பா.பாண்டி பக்கம் சென்றுவிட்டாராம் தனுஷ்.
இதையும் படியுங்கள்... கவுத்திவிட்ட கேப்டன் மில்லர்... 50வது படத்தில் கம்பேக் கொடுப்பாரா தனுஷ்? ராயன் மூவி சிறப்பம்சங்கள் ஒரு பார்வை
ராயன் படத்தில் தனுஷ் உடன் வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் அதிகளவில் சண்டைக்காட்சிகள் இருக்கும் காரணத்தால் சென்சாரில் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ராயன் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. தனுஷின் 50வது படம் என்பதால் அவரின் ரசிகர்கள் திரையரங்கில் பேனர் வைத்தும், அதற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்து ஆடிப்பாடியும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
கதைக்களம்
சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்துவிடும் தனுஷ், தன் தம்பிகளான சந்தீப் கிஷான், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை வளர்த்து வருகிறார். வட சென்னையில் வாழும் தனுஷின் குடும்பத்திற்கு எதிரிகளால் பிரச்சனை ஏற்பட்டு அவரின் அழகான குடும்பம் சின்னாபின்னமாகிவிடுகிறது. தன் குடும்பத்தை அழித்த எதிரிகளை தேடிப்பிடித்து அசுரனாய் வதம் செய்யும் படம் தான் இந்த ராயன்.
ராயன் படத்தின் முதல் பாதி வெறித்தனமாக உள்ளது. இரண்டாம் பாதி வெறித்தனத்தின் உச்சம். டைட்டில் கார்டு மற்றும் தனுஷின் எண்ட்ரி மெர்சலாக உள்ளது. இண்டர்வெல், கிளைமாக்ஸ் காட்சிகள் அனல்பறக்கின்றன. தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அல்டிமேட். சந்தீப், துஷாராவும் சிறப்பாக நடித்துள்ளார்கள் என பதிவிட்டுள்ளார்.
ராயன் ராவாகவும், அழுத்தமான படமாகவும் உள்ளது. தனுஷ் இந்த மாதிரி ஒரு படத்தை இயக்குவார்னு சுத்தமா எதிர்பார்க்கல. 90ஸில் பார்த்த ஏ.ஆர்.ரகுமான் இஸ் பேக். அவர் தான் படத்தின் இரண்டாவது ஹீரோ. அனைத்து நடிகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. வெற்றிமாறன் ஸ்டைல் படமாக ராயன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ராயன், என்ன ஒரு அருமையான படம். இந்திய சினிமாவின் ஆல்ரவுண்டர். சந்தீப் கிஷானுக்கு நல்ல ரோல் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு சீன் கூட போர் அடிக்கல. இண்டர்வெல் சீன் வெறித்தனம், பிளாக்பஸ்டர் லோடிங் என பதிவிட்டு இருக்கிறார்.
ராயன் படத்தின் கதாபாத்திர தேர்வும், அவர்களின் நடிப்பும் வேற லெவல். எஸ்.ஜே.சூர்யாவின் முதல் மோதல் மாஸ். சூப்பரான ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் அருமை. முதல் பாதி ஸ்லோ மற்றும் ஸ்டெடியாக செல்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு இருக்கிறது. படத்தில் உள்ள மெயினான ட்விஸ்ட் ஏற்கும்படியாக இல்லை. மொத்தத்தில் பார்க்கக்கூடிய படமாக ரயான் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
ராயன், நார்மலான ரிவெஞ்ச் ஸ்டோரியாக இருந்தாலும் தனுஷ் அதை தன்னுடைய எழுத்து மற்றும் இயக்கத்தால் தனித்து காட்டி இருக்கிறார். இண்டர்வெல், மற்றும் இரண்டாம் பாதியில் உள்ள நிறைய சீன்கள் குறிப்பாக கிளைமாக்ஸ் தியேட்டரிக்கல் மொமண்டின் உச்சம். ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்தின் உயிர்நாடியாக உள்ளது. காட்சியமைப்பு அருமை. அடங்காத அசுரன் பாடல் விஷுவல் ட்ரீட்டாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... அடங்காத அசுரனாய் வரும் தனுஷ்.. "ராயன்" - மிரட்டலான புது ப்ரோமோ இதோ!