சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துள்ள, போஸ் வெங்கட் பிரபல கட்சியில் போட்டியிட உள்ளதாக விருப்ப மனு தாக்கல் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துள்ள, போஸ் வெங்கட் பிரபல கட்சியில் போட்டியிட உள்ளதாக விருப்ப மனு தாக்கல் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ், மலையாளம், மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் காவல் அதிகாரியாக நடித்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது.

மேலும், ஜெயம் ரவி நடித்த தீபாவளி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, சூர்யாவுடன் சிங்கம் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி இவர், இயக்குனராக அறிமுகமான 'கன்னிமாடம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்: நட்சத்திர தம்பதி கரீனா - சைஃப் அலிகானுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...!

இந்நிலையில் நடிகர், இயக்குனர், என்பதைத் தாண்டி தற்போது அரசியலில் குதிக்க ஆயத்தமாகி உள்ளார் போஸ் வெங்கட். இவர் தற்போது திமுக கட்சியில் போட்டியிட உள்ளதாக கூறி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள தகவலில். அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட போஸ் வெங்கட் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: 'சித்தி 2 ' சீரியலில் ராதிகாவுக்கு பதில் யார்? லிஸ்டில் உள்ள மூன்று முன்னணி நடிகைகள் இவர்கள் தான்!

நடிகர்கள் தொடர்ந்து அரசியல் கட்சியில் குதிக்கும் நிலையில், தற்போது போஸ் வெங்கட் அரசியல் கட்சியில் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பிரபலமான நடிகை சோனியாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.