நட்சத்திர தம்பதி கரீனா - சைஃப் அலிகானுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...!
கரீனாவும் குழந்தையும் நலமாக இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து சோசியல் மீடியாவில் நட்சத்திர தம்பதிக்கு பாலிவுட் பிரபலங்கள், திரையுலகினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர், சைஃப் அலிகான் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 2012ம் ஆண்டு கரீனா கபூர் - சைஃப் அலிகான் ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டது.
இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் தைமூர் அலி கான் என்ற முதல் குழந்தை பிறந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கரீனாவும், சைஃப் அலிகானும் தாங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக சோசியல் மீடியாவில் வெளியிட வாழ்த்துக்கள் குவிந்தது.
இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதை அடுத்து சமீபத்தில் நூலகம், நீச்சல் குளம் என சகல வசதியும் கொண்ட பெரிய வீட்டிற்கு கரீனா - சைஃப் அலிகான் தம்பதி குடியேறினர்.
நேற்று இரவு மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரீனா கபூர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
கரீனாவும் குழந்தையும் நலமாக இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து சோசியல் மீடியாவில் நட்சத்திர தம்பதிக்கு பாலிவுட் பிரபலங்கள், திரையுலகினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.