Actor Premji Amaren : பிரபல நடிகரும், பாடகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு நாளை திருத்தணியில் திருமணம் நடைபெறவுள்ளது.
கடந்த 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பிறந்த பிரபலம் தான் பிரேம்ஜி அமரன். மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜியும் சிறுவயது முதலையே பாடல் மற்றும் இசைக்கருவிகளை இசைப்பதில் திறன் பெற்றவராக விளங்கி வந்தார். வெளிநாடுகளுக்கு சென்று இசை சம்பந்தமான படிப்புகளையும் இவர் பயின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் நடிகராக கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பயணித்து வரும் பிரேம்ஜி அமரன் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "ஞாபகம் வருதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ச்சியாக தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியது மட்டுமல்லாமல் நல்ல பல பாடல்களையும் இவர் பாடியிருக்கிறார்.
கோலிவுட் உலகில் உள்ள முரட்டு சிங்கிள்களில் இவரும் ஒருவர், பல ஆண்டுகளாகவே திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வந்த பிரேம்ஜி அமரன், தற்பொழுது இந்து என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். நாளை ஜூன் 9ம் தேதி அவர்களுடைய திருமணம் திருத்தணியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் அவருடைய சகோதரர் வெங்கட் பிரபு மற்றும் சென்னை 600028 பட குழு அனைவரும் ஒன்றாக இணைந்து தற்போது திருமண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
