- Home
- Gallery
- Arjun : உச்சி முகர்ந்த அப்பா.. பிரமாதமாக நடந்த ஐஸ்வர்யா அர்ஜுனின் நலுங்கு விழா - வெளியான கூல் கிளிக்ஸ்!
Arjun : உச்சி முகர்ந்த அப்பா.. பிரமாதமாக நடந்த ஐஸ்வர்யா அர்ஜுனின் நலுங்கு விழா - வெளியான கூல் கிளிக்ஸ்!
Aishwarya Arjun : கடந்த 43 ஆண்டுகளாக இந்திய திரை உலகில் மிகச்சிறந்த ஆக்சன் ஹீரோவாக பயணித்து வரும் நடிகர் தான் அர்ஜுன். அவருடைய மூத்த மகள் தான் ஐஸ்வர்யா.

Aishwarya
தமிழில் கடந்த 1984ம் ஆண்டு வெளியான "நன்றி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அர்ஜுன், கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Arjun
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 43 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் நடிகர் அர்ஜுன் நடிப்பில், இந்த 2024 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் மலையாள மொழியில் நான்கு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
Umapathy
அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கடந்த 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தவர், தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "பட்டத்து யானை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமானார். இதுவரை 3 திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார்.
Nalungu
தற்பொழுது அவருக்கும் பிரபல நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி ராமையாவிற்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில், தற்பொழுது ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு நலுங்கு விழா நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.