Silambarasan 48 : பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது 48வது படத்தில் நடித்து வருகின்றார் பிரபல நடிகர் சிலம்பரசன் அவர்கள். இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது முதலாவது வயதிலிருந்து திரைத்துறையில் பயணித்து வரும் ஒரு மிகப்பெரிய நடிகரும், இயக்குனரும் தான் சிலம்பரசன் அவர்கள். இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான "பத்து தல" என்கின்ற திரைப்படத்தில் ராவணன் என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். 

அதற்கு முன்னதாக கௌதம் வாசுதேவ் மேனனின் "வெந்து தணிந்தது காடு" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது 48வது திரைப்படத்தை "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். 

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் படத்தில் இனி நடிக்க மாட்டேன்! ஜாபர் சாதிக் கைதை தொடர்ந்து அமீர் அறிக்கை!

இந்த திரைப்படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றார், அதில் ஒரு கதாபாத்திரம் திருநங்கையின் கதாபாத்திரமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் செய்திகளை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் நிகழ்காலத்தில் நடக்கும் கதையையும் புராதான காலத்தில் நடந்த கதையையும் இணைக்கும் ஒரு கதையாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. 

Scroll to load tweet…

இந்த சூழ்நிலையில் போர் வீரர்கள் பலர் குழுமி நிற்க, குதிரைகள் கனைக்கும் சத்தத்திற்கு நடுவே சிலம்பரசன் நடந்து வருவது போல ஒரு வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது என்னவென்று தெரிந்து கொள்வதற்காக காத்திருங்கள் என்றும் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார். இது அவருடைய 48வது திரைப்பட காட்சி தான் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

பட்டு சேலையில்.. வெள்ளி சிலை போல் நின்று விதவிதமாக போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! வியக்க வைத்த போட்டோஸ்