Asianet News TamilAsianet News Tamil

நீ சினிமாவில் வில்லன்.. நாங்கள் நிஜத்திலேயே வில்லன்! நடிகர் பாபி சிம்ஹாவிற்கு மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு!

கோடி கணக்கில் பணம் பெற்று, தரமற்ற வீட்டை கட்டி பண மோசடி செய்த நபர்களிடம் இதுகுறித்து கேட்டதற்கு அவர்கள் அரசியல் பின்புலத்துடன் மிரட்டுவதாக பாபி சிம்ஹாவின் வழக்கறிஞர்  தெரிவித்துள்ளார்.
 

Accused of threatening actor Bobby Simha lawyer file the petition
Author
First Published Sep 22, 2023, 8:24 PM IST

நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானலில் கட்டி வரக்கூடிய வீட்டின் கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுள்ள நிலையில் பாபி சிம்ஹா வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், 

அப்போது பேசிய அவர்,

கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டிவரும் நிலையில் கட்டிட ஒப்பந்த தாரர்கள் தரமற்ற முறையில் வீட்டை கட்டி இருக்கிறார்கள்.

Accused of threatening actor Bobby Simha lawyer file the petition

இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக போகும் சூப்பர் சிங்கர் திவாகர்! நிறைமாத மனைவிக்கு வளைகாப்பு நடத்திய போட்டோஸ்!

அரசியல் குடும்ப பின்புலம் கொண்ட நபரான உசேன் மூலம் அறிமுகமான கட்டிட ஒப்பந்ததாரர் ஜமீரிடம் நடிகர் பாபி சிம்ஹா 1 கோடியே 30 லட்சம் ரூபாயில் வீடு கட்டித்தர ஒப்பந்தமிட்ட நிலையில் உசேன் மற்றும் ஜமீர் பணத்தை பெற்று கொண்டு வீட்டை முழுமையாக முடிக்காத நிலையில் கூடுதலாக 40 லட்சம் தரகோரி அழுத்தம் தந்துள்ளனர்.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அரசியல் பின்புலம் காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியதை தொடர்ந்து நீதிமன்றம் சென்று வழக்கு பதிவு செய்தோம்.

இதனால் கட்டுமான ஒப்பந்ததார்களை நடிகர் பாபி சிம்ஹா மிரட்டியதாக உசேன் மற்றும் ஜமீர் அளித்த பொய் புகாரை காவல் துறையினர் ஏற்று கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர், நாங்கள் புகார் கொடுக்கும் போது காலம் தாழ்த்திய காவல்துறை நீதிமன்றம் சென்று வழக்குதொடுத்த நிலையில் 10 நாட்கள் கழித்து அச்சத்தில் அவர்கள் கொடுத்த புகாரை உடனடியாக ஏற்றுக்கொண்டது என்றார்.

Accused of threatening actor Bobby Simha lawyer file the petition

விஜய் டிவி 'கிழக்கு வாசல்' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்! இனி அவருக்கு பதில் இவர் தான்.!

அதனை தொடர்ந்து 58 லட்சத்து 50 மதிப்பிலான தரமற்ற வீட்டின் கட்டுமானம் இருப்பதாவும் சுமார் 1 கோடியே 11 லட்சத்து 50 ரூபாய் மோசடி செய்து ஏமாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டிய நடிகர் பாபி சிம்ஹா வழக்கறிஞர் மோசடி செய்த பணத்தை திரும்ப தரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நீ சினிமாவில் வில்லனாக இருக்கலாம், ஆனால் நாங்கள் நிஜ வில்லன்கள் என நடிகர் பாபி சிம்ஹாவிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பி உசேன் மிரட்டியதாகவும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஆருண் மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலான ஆகியோரின் அரசியல் பின் புலத்தில் இதுபோன்ற மோடிகள் நடைபெறுவதாக குற்றம்சட்டினார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios