சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டுமே ஓட்டு போடுவேன் என ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் கடந்த 28 வருடங்களாக யாருக்கும் வாக்களிக்காமல் காத்திருக்கும் சம்பவம் கேட்பவர்களையே ஆச்சர்யமடைய வைத்துள்ளது. 

மேலும் செய்திகள்: உங்களை பாக்கணும் சூப்பர்ஸ்டார் விடமாட்றாங்க... ரஜினி வீட்டில் முன் கதறிய பெண்! நெஞ்சை உருக வைக்கும் வீடியோ!
 

கடந்த 2017ஆம் ஆண்டு " நான் அரசியலுக்கு வருவது உறுதி"  என்று கூறிய ரஜினி, 2021  ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும், டிசம்பர் 2020 , 31 ஆம் தேதி அதற்கான தேதி அறிவிப்பு செய்யப்படும் என்றும் சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன்  நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததுதான். 

அரசியல் அறிவிப்புக்கு பின் தற்போது ரஜினி தன்னுடைய 70 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதால் இந்த பிறந்தநாள் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் தனது பிறந்த நாளை கொண்டாட பெங்களூருவுக்கு சென்றுள்ள ரஜினி,  பெங்களூருவிலிருந்து ஹைதராபாத்தில் நடக்கும் ‘அண்ணாத்த’ சூட்டிங்கில் வரும் 15 ஆம் தேதி முதல் கலந்துகொள்ள உள்ளார். அதன்பிறகு கட்சி தேதியை அறிவித்து தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்: நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!
 

ரஜினி தற்போது சென்னையில் அவரது வீட்டில் இல்லை என்றாலும், அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் வீட்டின் முன் கூடி,ரஜினியை பார்க்க முடியவில்லை என்கிற ஏமாற்றத்தில் ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். இப்படி வெறித்தனமான பல ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு மிகவும் விசித்திரமான ரசிகர் ஒருவரும் உள்ளார். இவரை பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ஆச்சர்யப்படவைத்துள்ளது.

மேலும் செய்திகள்: நீங்கள் ஒரு அற்புதம், ஒரு அதிசயம்! சூப்பர் ஸ்டாரின் 70 ஆவது பிறந்தநாளுக்கு மழையாய் பொழிந்த வாழ்த்து..!
 

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்கிற தீவிர ரஜினி ரசிகர் ஒருவர், கிட்ட தட்ட 28 வருடமாக எந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கும் வாக்களிக்காமல், ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு தான் முதல் ஓட்டு என்று வைராக்கியமாக வாழ்ந்து வருகிறார். விரைவில் ரஜினி அரசியலில் இறங்க உள்ளது தனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் குறிப்பாக அவரது ஆன்மீகம் எண்ணம் தான்  அவர் மீதான அன்பை பலப்படுத்தியதாக கூறும் கூறுகிறார்.

காமராஜர், எம்ஜிஆருக்கு பின் அவர்கள் விட்டு சென்ற இடத்தை ரஜினி மட்டுமே நிரப்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ள மஹேந்திரன்,  இதுவரை 15 தேர்தலை கடந்துள்ளதாகவும், ஒருமுறை கூட யாருக்குமே ஓட்டு போடவில்லை, ரஜினி அரசியலுக்கு வருவதால் அவருக்கு தான் என் முதல் ஓட்டு என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த ரசிகரின் செயல் கேட்பவர்களையே வியப்படைய வைத்துள்ளது.