சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, நேற்று இரவு முதலே ரஜினியின் ரசிகர்கள் போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன் கூடி வருகிறார்கள். சரியாக இரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடி தங்களுடைய வாழ்த்தை தெரிவித்தனர்.

மேலும் ரசிகர்கள் பலர், அவரது பிறந்தநாளான இன்று எப்படியும் ரஜினியை பார்த்துவிட வேண்டும் என, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து குவிந்துள்ளனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை சந்திக்க மாட்டார் என கூறியதால், அவர் தற்போது போஸ் தோட்ட இல்லத்தில் இல்லை என்பதாலும் கும்பல் கும்பலாக வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் பெங்களூருவில் இருந்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகை ஒருவர், அவரை பார்த்த வேண்டும் என்கிற ஆசையில் வந்து, பாரமுடியவில்லையே எங்கிற ஏமாற்றத்தை தாங்க முடியாமல் சூப்பர் ஸ்டார் வாங்க, உங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆசையாக உள்ளது. ஆனால் உங்களை பார்க்க விட மாற்றங்க என குழந்தை போல் கதறி அழுதுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 

ரசிகர்களை தொடர்ந்து, பாரத பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், வைகோ. உள்பட பல அரசியல் தலைவர்களும் சூப்பர் ஸ்டாருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாக பார்க்கப்பட்டு வரும் பெங்களூரு ரசிகையின் கண்ணீர் வீடியோ இதோ...